குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஆண்மை தவறேல்!

Loading

ஆண் பலவீனனாக இருக்கக் கூடாது, பண்பட்டவனாக இருக்க வேண்டும். இறைத்தூதர்கள், நபித்தோழர்கள், இறைநேசர்கள் எல்லாம் பலவீனர்கள் அல்லர். அவர்கள் மகத்தான வலிமையும் மனவுறுதியும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதே சமயம், அவர்களிடம் பணிவும் சுயகட்டுப்பாடும் இருந்தன. தேவை ஏற்படும்போது எப்படிச் சண்டை செய்ய வேண்டுமென அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வெற்றியை இலக்காக்கிச் சண்டையிட்டும் இருக்கிறார்கள். அவர்களையே நாம் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

அரைவேக்காட்டுத்தனமான, மிதமிஞ்சிய நளினமும் தோல்வி மனப்பான்மையும் கொண்ட, மந்தமான, வீணர்களான ஒரு தலைமுறையை நாம் உருவாக்கக் கூடாது. ஆண்கள் பகலில் சிங்கங்களாகவும், இரவில் ஆத்ம ஞானிகளாகவும் வாழ்வதையே விழைய வேண்டும். இதில் மனநிலையும் நடத்தையும்தான் முக்கியம். பிழையான திசையில் செல்லும் ஆண்மை, நலவைக் காட்டிலும் தீமையையே அதிகம் கொண்டுவரும். ஆண்கள் பலர் தமது ஆண்மையை பிறருக்குத் தீங்கிழைக்கவும், பெண்களைக் கவரவும், அல்லது எளிமையாகச் சொன்னால் இஸ்லாத்திற்கு முரணான நோக்கங்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள்.

இறைவனையும் அவனது தூதரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் அது நெறிப்படுத்தப்பட வேண்டும். நடைமுறையில் அதற்கு அர்த்தம் என்னவென்றால் கடினமாக உழைப்பது, தெளிவாக சத்தியத்தைப் பேசுவது, அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதிருப்பது, மன உடல் வலிமையை அதிகரித்துக் கொள்வது, கோபத்தைக் கட்டுப்படுத்துவது, குறைவாக உண்டு குறைவாக உறங்குவது, நன்மைகளை நிலைநாட்டி, தீமைகளை ஒழித்துக்கட்டுவது, தன்னையும் தன் குடும்பத்தையும் மற்றவர்களையும் காத்துநிற்பது, இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆண்மை என்பதை ஏதோ நம் வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வுகொண்டு மருக வேண்டிய ஓர் ஆதி பாவம் போல் சித்தரிக்கிறது இன்றைய கலாச்சாரம். ஆனால், நாம் ஒழுங்குபடுத்தி, வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு கொடை அது.

தமிழில்: உவைஸ் அஹ்மது

Related posts

Leave a Comment