குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இளைய தலைமுறையை படுகுழியில் தள்ளும் ஆபாசம் – உம்மு ஃகாலிது

“இளைய தலைமுறையினரிடம் நிர்வாணத்தையும் விபச்சாரத்தையும் பரவலாக்கினால் எந்தவொரு நாட்டையும் யுத்தமின்றி அழித்துவிட முடியும்” என்பார் சலாஹுதீன் அய்யூபி. உண்மையில், சமூகத்தில் அழிவை உண்டாக்கும் இந்த விஷயங்களை இன்று நாம் மிகப் பரவலாகக் காண முடிகிறது. நிர்வாணமும் கட்டற்ற விபச்சாரமும் இன்றைக்கு விஸ்வரூபமெடுத்திருக்கின்றன.

பின்வரும் விஷயங்களைச் சுற்றியே நவீன, மதச்சார்பற்ற மேலை சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவை மேற்குலகத்தைத் தாண்டியும், முஸ்லிம் சமூகங்களிலும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன:

 • புகைப்படத்துக்குக் கவர்ச்சியூட்டும் ஃபில்டர்களைப் பயன்படுத்துதல்
 • சமூக வலைத்தளங்கள் (இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட் முதலியன)
 • ஃபேஷன் துறையின் ட்ரண்டின் பின்னால் செல்லுதல்
 • வாயைக் கோணிக்கொண்டு செல்ஃபி எடுத்தல்
 • மேக்அப் கலாச்சாரத்தை சுவீகரித்தல்
 • ஹாலிவுட் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக நிர்வாணத்தை விற்றல்
 • ஆபாசப் படங்கள் சர்வ சாதாரணமாகக் கிடைத்தல்

தற்காலத்தில் எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் மக்கள் ஆட்டு மந்தையைப் போல நிர்வாணம், விபச்சாரம் ஆகிய ஒழுக்கக்கேட்டின் படுகுழியின் ஆழத்தில் மூழ்குவதைப் பார்க்க முடிகிறது.

இஸ்லாம் கற்பிப்பது இவற்றுக்கெல்லாம் முற்றிலும் முரணானது; இந்தத் தீமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்துவது:

 • ஹிஜாப் முறையைப் பேணுதல்
 • வெட்கத்தைக் கடைப்பிடித்தல்
 • பார்வைகளைத் தாழ்த்துதல்
 • எதிர் பாலினத்தாருடன் கலக்காதிருத்தல்
 • மஹரமில்லாதவர்களுடன் தனித்திருப்பதைத் தவிர்த்தல்
 • ஆண் பெண் தொடர்பாடலில் ஒழுங்குகளைப் பின்பற்றுதல் (குழைந்துப் பேசுவதைத் தவிர்த்தல் முதலின)

இஸ்லாத்தைப் பொருத்தவரை, இங்கே சுட்டிக்காட்டிய இறைவன் விதித்த விதிமுறைகள் இரு பாலருக்கிடையிலான தொடர்பாடலை நிர்ணயிக்கின்றன. அவை தனிப்பட்ட அளவில் நம்மைப் பாதுகாப்பதுடன், குடும்ப அமைப்பையும் பாதுகாக்கிறது. மேலும், சமூகம் சீரழிவில் வீழ்த்துவிடாமலும் தடுக்கிறது.

நாம் இந்த இறை வழிகாட்டுதல்களிலிருந்து விலகிச் சென்றால் நமக்கு நாமே பேரழிவையும், சீர்கேட்டையும் தேடிக்கொள்வோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

(ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு: நாகூர் ரிஸ்வான்)

Related posts

Leave a Comment