கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலம் கடந்தும் கனலும் பெரு நெருப்பு

Loading

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்காவின் இனவெறி நிறைந்த தெருக்களில் ஒரு குரல் எழுந்தது. அது வெறும் எதிர்ப்பின் குரல் மட்டுமல்ல, விடுதலையின் தத்துவத்தை மறுவரையறை செய்த ஓர் அறிவுசார் புரட்சிக் குரல். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரின் பெயர், வரலாற்று இயங்கியலில் (Historical Dialectics) ஒரு முக்கியமான ஆளுமையாக இடம் பிடித்திருக்கிறது. ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மட்டும் அவர் வழங்கவில்லை; மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், அடையாளத்தையும், உரிமைகளையும் புதிய பரிமாணங்களுக்கு உயர்த்திய சிந்தனையாளராக அவர் திகழ்ந்தார். இனப்பாகுபாட்டால் இளம் வயதில் சந்தித்த சோதனைகள், சிறைவாசம், ஆன்மிகத் தேடல் என தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு, ஒடுக்கப்பட்டவர்களின் ஓர் அடையாளமாகத் திகழும் அவர் மால்கம் லிட்டில் என்ற மால்கம் X. குடியுரிமையிலிருந்து மனித உரிமைக்கு: ஒரு தத்துவார்த்த பாய்ச்சல் மால்கமின் மிக முக்கியமான அறிவுசார் பங்களிப்புகளில் ஒன்று, கறுப்பர்களின் பிரச்சினையை…

மேலும் படிக்க