இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் றமளான் மாதத்தில் மாபெரும் வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து 10 எடுத்துக்காட்டுகளைச் சுருக்கமாக முன்வைக்கும் அறபிக் கட்டுரையின் தமிழாக்கம்.
ஒரே இறைவன், ஒரே தூதர், ஒரே வேதம், ஒரே உம்மத் – என்ற கருத்தாக்கம்கொண்ட முஸ்லிம் சமூகத்தில் பல்வேறுபட்ட பிளவுகளும் குழுக்களும் இருப்பதுபோல் தோன்றுவதன் உண்மைநிலை என்ன? 1400 ஆண்டுகால நீண்ட இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறுபட்ட சமூக-அரசியல் சூழல்களில் தோன்றிய இச்சிந்தனைக் குழுக்களின் அடிப்படைகள், வகைகள், வேறுபடும் புள்ளிகள் போன்றவற்றை விளக்கி இமாம் முஹம்மது அல்ஆஸி அவர்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளை மொழிபெயர்த்து தொடராகப் பதிவிடுகிறோம். தேடலுள்ள ஆரம்பநிலை வாசகர்களுக்கு இவை நல்லதொரு புரிதலை வழங்குமென்று எதிர்பார்க்கலாம்.
[இமாம் முஹம்மது அல்ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். உரையாற்றிய நாள்: 13-01-2006, இடம்: வாஷிங்டன் டி.சி. YouTube Link: The politics of state and Islamic opposition; தமிழில்: ஜுந்துப்] அல்லாஹ் நமக்குப் பல செய்திகளை வழங்கியுள்ளான். இறைத்தூதருடைய (ஸல்) நடத்தைகளும் நம்மிடையே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இவையனைத்தும் நூற்றாண்டுகாலத் தவறுகள் மற்றும் திரிபுகளின் பாதிப்புகளுக்கு ஆட்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படவில்லை. அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் நாம் தொடர்புகொள்ளும்போது, பிற விஷயங்கள் மற்றும் சக்திகளின் தலையீடு இருக்கும்பட்சத்தில் அவற்றின் தாக்கம் நம்மீது அதிகம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களோடு கொண்டுள்ள உறவில் நாம் உண்மையாக இருந்தால், இவ்வாறு ஏற்படும் தலையீடு அவ்வுறவை வலுப்படுத்துமே ஒழிய அதை சமரசம் செய்வதாகவோ, பேரம் பேசி சரி செய்வதாகவோ, தவறான காரணங்களையும் சாக்குப்போக்குகளையும் சொல்லி அதைத் திணறடிப்பதாகவோ இருக்காது. நம்…