கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மாலிக்: பீமாப்பள்ளி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது துப்பாக்கிச்சூடு!

Loading

பீமா பள்ளி துப்பாக்கிச்சூட்டிற்குக் காரணமானவர்களைக் குறித்து பேசாமல் மெளனம் சாதித்தும், பாதிக்கப்பட்டவர்கள் மீது சந்தேகத்தின் நிழலை படியச் செய்தும், வரலாற்றையும் உண்மையையும் திரித்தும் ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நேர்த்தியான படைப்பு என்ற ஒற்றைக் காரணம் மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிவிடாது என்ற உண்மையை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

ஃபேமிலி மேன் இரண்டாம் சீசனின் அபத்தங்களும் ஆபத்துகளும்

Loading

அடிப்படை உரிமைகளற்று, அன்றாடம் பெரும் நெருக்கடிகளுக்கிடையில் வாழ்க்கையை நகர்த்தியபடி, இத்தேசத்தின் குடிகள் ஆவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் ஈழ அகதிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்திருக்கும் சீரியல்தான் ஃபேமிலி மேன் 2. மட்டுமின்றி, முதல் சீசன் முழுவதும் பரவிக்கிடந்த இஸ்லாமிய வெறுப்பு இரண்டாவதிலும் சிதறிக்கிடக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை

Loading

இப்படத்தில் வரும் ஒரே நல்ல முஸ்லிம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக, இந்திய இராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவனாக, பார்ப்பனப் பெண்ணை கலப்பு மணமுடித்தவனாக, கதக் கற்றவனாக, இறையியல்களின் இரும்புவேலியைத் தாண்டிய பிரபஞ்சமயமான ஆன்மிகத்தை உணர்ந்தவனாக, தமிழ் அறிவுச்சூழலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘வஹ்ஹாபி அல்லாத சூஃபியாக’ சித்தரிக்கப்படுகிறான். இதற்கு எதிரே ஏனைய எல்லா முஸ்லிம்களும் தூய்மைவாதிகளாகவும், கெடுபிடியுடன் இஸ்லாமியச் சட்டதிட்டத்தைப் பின்பற்றுபவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கமலின் விஸ்வரூபத்தை எந்தச் சட்டகத்தில் வைத்துப் புரிந்துகொள்வது?

Loading

தமிழில் தேவர் சமூகப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து வந்திருந்திருக்கின்றன என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்கு சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் 

எந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது

Loading

மனித வாழ்வுக்கு கலை அவசியமானது என்பேன். கலைகள் எல்லாம் உயர் மனிதப் பண்புகளை நம்முள் விதைக்கக்கூடியவை. எதிர்மறை மனிதப் பண்புகளை நம்மிடமிருந்து அகற்றுவதற்கு கலை, இலக்கியங்கள் அவசியத் தேவை. உண்மையில், கலைகளின் செயல்பாடும் நல்ல மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்?

Loading

உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை? எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன? அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை? காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை?

மேலும் படிக்க