காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

ஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை

இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் தமக்கேயுரிய பிரத்யேகமான பிரச்சினைகளைக் கொண்டவை. ‘இந்தியா’ எனும் தேசிய உணர்வைப் பொறுத்த வரையிலும் கூட அங்குள்ள நிலவரம் சற்று வேறுபட்டதுதான். இந்திய நடுவண் அரசு அந்த மாநிலங்களோடு நடந்துகொள்ளும் போக்கிலும் வித்தியாசம் இருக்கிறது. கூர்மையான வரலாற்றுப் பார்வையின் வழியாகவே இப்பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

மலைவாழ் மக்கள் X சமவெளி மக்கள், அஸ்ஸாமிய மொழியினர் X வங்க மொழியினர், பழங்குடிகள் X பழங்குடி அல்லாதவர்கள் எனப் பல்வேறு எதிர்மைகள் நிலவும் அஸ்ஸாமில் “சட்டவிரோதக் குடியேறிகள்”, “ஊடுருவல்காரர்கள்” என்று ஒரு பொது எதிரியைக் கற்பித்துக் காட்டி அஸ்ஸாமிய ஒருமைப்பாட்டுணர்வைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் 1980கள் முதலே தொடங்கிவிட்டன. ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட “சட்டவிரோத வங்கதேசக் குடியேறிகள்” என்ற பிரச்சினை பின்னர் “வங்கதேச முஸ்லிம் குடியேறிகள்” என்பதாக மாறி, இப்போது அஸ்ஸாமிலுள்ள வங்கமொழி பேசும் முஸ்லிம்கள் அனைவரது குடியுரிமையையும் காவு வாங்கிடத் துடிக்கும் ஓர் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மிக மோசமானதொரு கட்டத்தை எட்டியிருக்கிறது.

மக்கள் தகுந்த ஆவணங்களைக் கொண்டு தம்முடைய குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட NRC (National Register of Citizens) பட்டியலில் இடம்பெறாத நாற்பது லட்சம் பேரின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

இது பற்றி விரிவான கட்டுரைகளை விரைவில் ‘மெய்ப்பொருள்’ தளத்தில் வெளியிட எண்ணியிருக்கிறோம்.

இப்போதைக்கு இந்தப் பிரச்சினை தொடர்பாக அல்ஜஸீரா நடத்திய கலந்துரையாடல் காணொளியை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

பங்கேற்றவர்கள்:

ரானா அய்யூப்

பிரேம் ஷங்கர் ஜா

அமான் வதூத்

Related posts

Leave a Comment