கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘பிரிவினைவாத எதிர்ப்பு மசோதா’: பிரான்ஸில் சட்டப்பூர்வமாகும் இஸ்லாமோ ஃபோபியா

Loading

பிரான்ஸின் செனட் அவையில் கொண்டுவரப்பட்டுள்ள ’பிரிவினைவாத எதிர்ப்பு மசோதா’ அந்நாடு முழுக்க பெரும் சர்ச்சைக்கும் விவாதங்களுக்கும் இட்டுச்சென்றுள்ளது. இந்தச் சட்ட வரைவானது இஸ்லாமோ ஃபோபியாவுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதாக மனித உரிமை ஆர்வலர்களும் முஸ்லிம்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், அரசு ”இஸ்லாமியப் பிரிவினைவாதத்துக்கு” எதிரான மசோதா என்பதாக இதை முன்வைத்து வருகிறது.

பிரான்ஸ் நாடு 2004ல் ஹிஜாப், டர்பன் உள்ளிட்ட மத அடையாளங்களை பள்ளிக்கூடங்களில் தடை செய்தபோதும், 2011ல் முகத்திரை அணிவதைத் தடை செய்தபோதும், 2016ம் ஆண்டு பல பகுதிகளில் புர்கினி (முழு உடலையும் மூடும் வகையிலான நீச்சல் உடை) தடை செய்யப்பட்டபோதும் இதேபோன்ற விவாதங்கள் மேலெழுந்தன. பிரான்ஸின் மதச்சார்பின்மை எந்த அளவு மூர்க்கமாக மத அடையாளங்களை ஒடுக்குகிறது என்பது அப்போது பெரிதும் பேசப்பட்டது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி

Loading

பிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய அரசியல் சூழல் மற்றும் பின்னணியிலிருந்து ஆய்வு செய்வது அவசியம். இப்படியான ஒரு அரசியல் பின்னணியில் இரக்கமற்ற பயங்கரவாதத்தால் கொலையுண்ட மக்கள் அனைவருக்கும் நம் அஞ்சலிகளும் அனுதாபங்களும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை

Loading

நியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும் இஸ்லாம்-அச்சமும், இஸ்லாம்-வெறுப்பும் பெருமளவில் பரவலாக்கப்பட்டுள்ளன. வெள்ளையினத் தேசியவாதிகளும், சுவிஷேசக் கிறிஸ்தவர்களும் (Evangelical Christians), ஸியோனிஸ்டுகளும் இதைப் பெரும் தொழிலாகவே வளர்த்தெடுத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க
காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி!

Loading

“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”

மேலும் படிக்க
கட்டுரைகள் 

ஃபல்லூஜா – மினாரத்களின் நகரம் மயான பூமியான கதை

Loading

ஒரு காலத்தில் மினாரத்களின் நகரம் என்று பெருமையோடு அழைக்கப்பட்ட ஈராக்கின் ஃபல்லூஜா நகரம்,அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் பெரும் யுத்தங்களுக்கும் அழிவுகளுக்குமுரிய செய்தியாகி வருவது பெரும் துரதிஸ்டமே. ஐஸ்ஐஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நகரத்தை மீள கைப்பற்றுவதற்கு ஈராக்கிய இராணுவம் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையே இந்த நகரத்தின் பெயர் மீண்டும் உலக மீடியாக்களின் செய்திகளில் தலைப்பு செய்தியாக மாறியிருப்பதற்கு காரணமாகும்.

மேலும் படிக்க