தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 2)

Loading

முதலில் இந்தக் கண்ணோட்டம் மனிதர்களுக்கு அவர்களின் இறைவனைக் குறித்து துல்லியமாக, முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. அவனது பண்புகளைக் குறித்து, அவனது தனித்தன்மைகளைக் குறித்து பிரபஞ்சத்திலும் மனிதர்களிலும் இன்னும் படைப்புகள் அனைத்திலும் காணப்படும் அவனது சான்றுகள்குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆனின் பெரும்பகுதி இவ்வாறு எடுத்துரைப்பதிலேயே நிறைவடைகிறது. அது இறைவனின் இருப்பை மனித மனதில் மிகத் தெளிவாக, துல்லியமாக, ஆழமாக பதிய வைக்கிறது. மனித மனம் அதன் அத்தனை பகுதிகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. அது அதனோடு வலுவாக இணைக்கப்பட்டு வாழ்கிறது. அதைவிட்டு வெருண்டோடுவதுமில்லை, அலட்சியமாக இருந்துவிடுவதுமில்லை. ஏனெனில் அதிலுள்ள ஆற்றலும் தெளிவும் எப்போதும் மனித மனதை எதிர்கொள்கிறது. அதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 1)

Loading

இருப்பிற்கும் இல்லாமைக்குமான தூரத்தை மனித அறிவால் விளக்க முடியாது. இந்த உலகம் எவ்வாறு வந்தது? இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது? தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் “ஆகு” என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். இந்த உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவில்லையெனில் நம்மால் எந்த விளக்கத்தையும் கூற முடியாது அல்லது மெய்யியலாளர்களைப்போன்று காரிருளில் தடுமாறித் திரிவோம். இருப்பிற்கும் இல்லாமைக்குமிடையே இருக்கின்ற தூரத்தைப்போன்ற உயிரற்ற சடப்பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் இடையே தூரம் காணப்படுகின்றது. தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு விளக்கம் அளிக்க முடியாது. “அவனே ஒவ்வொன்றையும் படைத்து பின்னர் வழிகாட்டினான்.”

மேலும் படிக்க