தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 2)

Loading

முதலில் இந்தக் கண்ணோட்டம் மனிதர்களுக்கு அவர்களின் இறைவனைக் குறித்து துல்லியமாக, முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. அவனது பண்புகளைக் குறித்து, அவனது தனித்தன்மைகளைக் குறித்து பிரபஞ்சத்திலும் மனிதர்களிலும் இன்னும் படைப்புகள் அனைத்திலும் காணப்படும் அவனது சான்றுகள்குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆனின் பெரும்பகுதி இவ்வாறு எடுத்துரைப்பதிலேயே நிறைவடைகிறது. அது இறைவனின் இருப்பை மனித மனதில் மிகத் தெளிவாக, துல்லியமாக, ஆழமாக பதிய வைக்கிறது. மனித மனம் அதன் அத்தனை பகுதிகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. அது அதனோடு வலுவாக இணைக்கப்பட்டு வாழ்கிறது. அதைவிட்டு வெருண்டோடுவதுமில்லை, அலட்சியமாக இருந்துவிடுவதுமில்லை. ஏனெனில் அதிலுள்ள ஆற்றலும் தெளிவும் எப்போதும் மனித மனதை எதிர்கொள்கிறது. அதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அல்பாத்திஹா: ஆரம்பம் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

அல்லாஹ்வைக்குறித்து, அவனது பண்புகள் குறித்து, அவன் படைப்புகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து சரியான கண்ணோட்டத்தை நிலைநிறுத்துவதற்கு இஸ்லாம் மேற்கொண்ட நீண்ட நெடிய முயற்சியை திரும்பிப் பார்ப்பவர் – குர்ஆனின் வசனங்கள் இந்த முயற்சியை படம்பிடித்துக் காட்டுகின்றன – மனித சமூகத்தில் மண்டிக்கிடந்த தவறான கொள்கைகள், தீய கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் குவியல்களை அறியாமல் இஸ்லாம் மேற்கொண்ட இந்த நீண்ட நெடிய முயற்சியின் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியாது. அந்தக் குவியல்களை ஆராய்ந்து பார்ப்பது இந்த முயற்சியின் அவசியத்தைத் தெளிவுபடுத்தும். மனிதனின் மனதை இத்தகைய பல்வேறு வகையான கடவுள்கள், கண்ணோட்டங்கள், யூகங்கள், புராணங்கள் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு இஸ்லாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதும் தெளிவாகும்.

மேலும் படிக்க