கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

குர்பானி கொடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

Loading

ஹஜ் பெருநாள் நெருங்கிவிட்டது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஹஜ் செல்லும் வாய்ப்பு உலகெங்குமுள்ள பெரும்பாலான முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை. கொரோனா இரண்டாவது அலை தனிந்து, தற்போது தமிழகம் முழுக்க ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த நோன்புப் பெருநாளைப் போலன்றி இப்போது பெருநாள் தொழுகைக்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. அதேபோல், குர்பானி கொடுப்பதற்கு ஏதுவான சூழலும் அமைந்திருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதற்கான அவசியம்

Loading

இஸ்லாம் என்பது இறைவன் எனும் அகண்ட சாரத்திலிருந்து பிரவாகிக்கும் அறிவுப் பிரளயமாகும். அதனைக் கற்றலானது அறிதல் (تعلّم), ஆழ்ந்தறிதல் (تفقّه) எனும் இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. இஸ்லாத்தை அறிவது எல்லோருக்கும் சாத்தியம். ஆனால் இஸ்லாத்தை ஆழ்ந்தறிவதென்பது வரையறுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியம். முஸ்லிம் அல்லாதோர் கூட, ஒப்பீட்டு சமயக் கற்கைகளில் இஸ்லாமிய அறிவைப் பெறுகிறார்கள். ஆனால், இஸ்லாத்தை புரிந்து ஏற்று நடத்தல், ஆன்மீகவெளியில் பயணப்படல் என்பன அவர்களுக்கு அசாத்தியமாகவே இருக்கின்றன. இதே நிலைமையை நம் மத்தியிலுள்ள இஸ்லாமியக் கல்லூரிகளிலும் ஆன்மீக அறிவகங்களிலும் நம்மால் காணமுடிகின்றது. இன்று இஸ்லாம் பேசுவோரில் அதிகமானோர் அதனை ஆழ்ந்தறிந்தவர்கள் கிடையாது என்பதுதான் உண்மை.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும்

Loading

நிலவும் ஆதிக்க அமைப்பில் பங்கேற்று பதவிகளுக்கு வருவதன் மூலம் சமூகத்திற்குத் தம்மால் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதான ஒரு கற்பிதம் இன்று கேள்விக்கப்பாற்பட்ட ஒன்றாக மாறிவருகிறது. அமுலில் இருக்கும் சட்டவிரோத ஆட்சிக்கு ஒரு துளியேனும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காதிருப்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும் என்பதில் இமாம் அபூ ஹனீஃபா மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருந்தாக இந்நூல் மூலம் அறியவருகிறோம்.

மேலும் படிக்க