கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உலக குடியாட்சி தினம்: ஜனநாயகத்தில் சிறுபான்மையினர் – அ.மார்க்ஸ்

Loading

பெரும்பான்மையின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்படுவது, கருத்தொருமிப்பின் அடிப்படையில் உருவான அரசியல் சட்டத்தின் ஆளுகை (Constitutional Governance) முதலியவற்றை நாம் ஜனநாயகத்தின் முக்கியக் கூறுகள் என்கிறோம். இவை ஒவ்வொன்றுமே ஆழமான பல தத்துவார்த்தப் பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளன.

”பெரும்பான்மை” எனும்போது அதன் மறுதலையாக ”சிறுபான்மை” ஒன்று இருந்தாக வேண்டும். ஜனநாயகத்தில் அந்தச் சிறுபான்மையின் பங்கு என்ன? பெரும்பான்மையின் ஆட்சி என்கிறபோது ”பெரும்பான்மை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வது” (Majority Takes All) என்ற பொருள் வந்துவிடுகிறது. அப்படி ஆகும்போது அது ஜனநாயகம் என்பதாகவன்றி ஜெஃபர்சன் சொல்வதுபோல ”கும்பலாட்சி” (Mob Rule) ஆகிவிடுகிறது. பெரும்பான்மையின் ஆட்சி என்றால் 51 பேர் 49 பேர்களை ஒடுக்குவதுதானே என்றார் அவர். ஆக, ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. சிறுபான்மையினரும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரமும் அவர்களின் கருத்துகளைப் பேசுவதற்கும், பரப்புவதற்கும், அதைப் பெரும்பான்மையாக ஆக்குவதற்குமான முழு வாய்ப்பும் அளிக்கப்படுவதுதான் ஜனநாயகம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 4) – மரியம் ஜமீலா

Loading

“எமது ‘பெருங்குற்றம்’ என்னவெனில், இஸ்லாமிய நம்பிக்கை விஷயத்தில் நாம் நயவஞ்சகர்களாக இல்லாதிருப்பதும் நம் சமூக அலுவல்களை இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கும் முயற்சிகளில் நாம் பேரார்வத்துடன் இருப்பதுமே ஆகும். இஸ்லாம்தான் எங்கள் மார்க்கம் என நாம் பிரகடனப்படுத்தும் பொழுது, இயல்பாகவே இஸ்லாம் தான், இஸ்லாம் மட்டுமே, எங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் –அது நன்னடத்தை சம்பந்தமான, நம்பிக்கை அல்லது கொள்கை, கல்வி அல்லது ஒழுக்கம் சம்பந்தமான, சமூக கலாச்சார முயற்சிகள், அரசியல், பொருளாதார அமைப்பு, சட்டம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் என எல்லாவற்றையும்- வழி நடத்துவதாக அமையும். அணு அளவேனும் நம்மை மாசுபடுத்தும் எந்தவொரு அந்நிய செல்வாக்கையும் நம் தனி மற்றும் தேசிய வாழ்விலிருந்து துடைத்தெறிய வேண்டும். இவ்விஷயத்தில் எத்தகைய சமரசத்தையும் பொருட்படுத்த மாட்டோம்; எதைப் பிரகடனம் செய்தோமோ அதையே நடைமுறைப்படுத்துவோம்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் 

“பெரும்பான்மை” அபிப்பிராயம் தலைவரைக் கட்டுப்படுத்துமா?

Loading

“பெரும்பான்மை அபிப்பிராயம் எப்போதும் சரியாகவே இருக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை அல்லவா?!” என்று சிலர் கேள்வியெழுப்ப முயலுகிறார்கள். ‘தலைவரின் கருத்து மட்டும் எப்போதும் சரியாகவே இருக்கும்’ என்பதற்கும் தான் உத்தரவாதம் இல்லை, அல்லவா?! எனவே, இது சரியானவொரு வாதமில்லை. இதனைக் கருத்தில் கொண்டுதான், இஸ்லாம் “ஷூறாவிலிருந்து பிறக்கும் பெரும்பான்மை அபிப்பிராயம் தலைவரைக் கட்டுப்படுத்தும்” என்கிறது.

மேலும் படிக்க