கட்டுரைகள் காணொளிகள் 

மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

Loading

இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட புரட்சிகர சிந்தனையாளரான அவர், இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்கிடச் செய்யும் உயரிய லட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர். பல இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதர்ச நாயகராக விளங்கிய மௌதூதியைக் கற்பதற்கான ஆர்வமும் தேடலும் உலகம் முழுக்க இன்றும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 3) – சையித் குதுப்

Loading

ஜாஹிலிய்யாவை அறிந்தவரால்தான் இஸ்லாத்தின் அவசியத்தை, சிறப்பை உணர்ந்துகொள்ள முடியும். இந்த மார்க்கத்தின் பரிபூரணத் தன்மையையும் ஒத்திசைவையும் அது வெளிப்படுத்தும் உண்மையின் எளிமையையும், அதனைத்தவிர மற்ற கொள்கைகளையும் அவை ஏற்படுத்திய பாதிப்புகளையும் அறிந்தவரால்தான் மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். அச்சமயத்தில்தான் இந்த மார்க்கம் உண்மையான அருட்கொடையாகத் தென்படும். அதன் அழகியலும் எளிமையும் தெளிவும் ஒத்திசைவும் நெருக்கமும் மனித அறிவுக்கும் உள்ளத்திற்கும் ஒட்டுமொத்த மனித வாழ்வுக்கும் மிகப் பெரிய அருட்கொடையாகும். அது மனித இயல்போடு முழுவதுமாக ஒன்றிப் போகக்கூடியது.

மேலும் படிக்க