சர்வாதிகாரிகளின் மனநிலை: ஜெயாவை முன்வைத்து
பெயரளவிலேனும் திராவிடத்தைக் கொண்டிருந்த ஓரியக்கம் இல்லாமலாகும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவது எச்சித்தாந்தம் என்பது கடும் அச்சுறுத்தலை தரும் கேள்வி. மாற்று கட்சியாக திமுக இருந்தபோதிலும் சமூகநீதியையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தும் அமைப்புகள் அல்லது கட்சிகளே தற்போதைய தேவை. ஆயினும் நிலைமை என்னவோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதிமுகவுடைய வீழ்ச்சியின் பலனை பாஜக அனுபவிப்பதென்பது மாற்றுஅரசியலை நாடும் அனைத்து அமைப்புகளின் தற்காலிக தோல்வியென்றே கூறலாம். எனினும் நாம் நம்பிக்கை இழக்கத்தேவையில்லை. தீயவைகள் தங்களை முற்றாக வெளிப்படுத்தியபிறகு நன்மைக்கான காலம் கனியவே செய்யும் என்பதுதான் மனிதச்செயல்பாடுகளுக்கான ஆதார சிந்தனையாக இருக்கிறது.
மேலும் படிக்க