காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

சவூதி அறபியா ஃபலஸ்தீனுக்கு முழு ஆதரவு வழங்காதது ஏன்?

Loading

1973ல் அறபு-இஸ்ரேல் போர் நடந்தபோது சவூதியை ஆட்சிபுரிந்த மன்னர் ஃபைசல் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்து அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மிகப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தார். அது அவர்களுக்கு பொருளாதார ரீதியான அடியைக் கொடுத்தது. உலக அரங்கில் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தியது. இதுபோல் ஒரு சரியான, தாக்ககரமான நடவடிக்கையை MBS எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

மேலும் படிக்க
seermai uvais ahamed நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

வஹ்ஹாபியம்: ஒரு விமர்சன ஆய்வு – அணிந்துரை

Loading

ஹமீது அல்கரின் இந்தப் புத்தகம் வஹ்ஹாபியத்தின் தந்தையான முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் பூகோளப் பின்னணி, அறிவுத் தகைமை போன்ற அடிப்படையான அம்சங்கள் தொட்டு பலவற்றை விவாதிக்கின்றது. சுன்னீ இஸ்லாமிய மரபிலிருந்து வஹ்ஹாபியம் எவ்வாறு விலகி நிற்கிறது, நவீன கால வரலாற்றில் தோன்றிய பிற சீர்திருத்த இயக்கங்களிலிருந்து அது வேறுபடும் புள்ளிகள் என்னென்ன, பிறவற்றோடு வஹ்ஹாபிய இயக்கத்தை ஒப்பிடுவது ஏன் தவறு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இது விடையளிக்கிறது. குறிப்பாக சஊதி அறபியாவின் உருவாக்கத்தில் வஹ்ஹாபியத்தின் செல்வாக்கு, அது ஏகாதிபத்திய சக்திகளுடன் கொண்ட உறவு, பண்பாட்டு வெளியில் அதன் பாதிப்புகள், முஸ்லிம்களிடையே அது கூர்தீட்டியிருக்கும் குறுங்குழுவாதம் ஆகியவையும் இப்புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றன.

வஹ்ஹாபியத்தின் வேர் முதல் நுனி வரை அலசும் இந்நூலின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு விரிவாக ஆராய முடியும். அந்த அளவுக்குச் செறிவான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கிறது இவ்வாக்கம். தாங்கள் மட்டுமே ஓரிறைவாதத்தை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் என்றும், தாங்களே நூதன வழக்கங்களைத் தவிர்த்து தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும் ஏகபோக உரிமை கோரும் வஹ்ஹாபிகளின் அடித்தளத்தை இப்புத்தகம் கேள்விக்குட்படுத்துகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சவூதி அரசு மக்காவை துஷ்பிரயோகம் செய்கிறது

Loading

ஜமால் கஷோக்ஜியின் கொலைக்குப் பிறகு, சவூதியின் முடியாட்சி ராஜ்யம் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் என்ற புனிதப் பள்ளிவாசலின் பிரசங்க மேடையை அங்குள்ள இமாம்கள் மூலம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆட்சியாளர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் போற்றிப் புகழ்ந்து நியாயப்படுத்தவும், புனிதப்படுத்தவும் முனைந்துள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

‘சவூதி’ அறேபியா: மாயத்திரை விலகட்டும்!

Loading

சவூதியை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ளும் இந்த பாமர உளவியலுக்குப் பின்னாலிருக்கும் காரணிகளை விளங்கிக் கொள்ளும்போதே நாம் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமாகும். அதே போல், அது தனது தோற்றம் முதல் இன்று வரை செய்து கொண்டிருப்பதென்ன என்பது பற்றியும் புரிந்து கொள்வது முக்கியம். சுருக்கமான இக்கட்டுரையின் வரம்புகளுக்குள் நின்று இவை பற்றி இயன்றவரை பார்க்கலாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம் – ஸஃபர் பங்காஷ்

Loading

ஆக, முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் சவூதுக் குடும்பத்தின் விருப்பு வெறுப்புகளை பின்பற்றுவதா? அல்லது, அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவின் கட்டளைகளையும் அவனது அன்புத் தூதரின் (ஸல்) வழிமுறையையும் பின்பற்றுவதா?

மேலும் படிக்க