கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்ஜும் ஜிஹாதும்

Loading

முஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாது இயக்கத்தை துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்தான் அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 4)

Loading

நபியவர்கள் எவ்வாறு முக்கிய அதிகார மையங்களை குடிமை உடன்பாடுகளின் கீழ் ஒன்றிணைத்தார்கள் என்பதையும்; தாம் செய்வதாக அவை வாக்களித்தவற்றுக்கு எவ்வாறு அவற்றைப் பொறுப்பாக்கினார்கள் என்பதையும் அவதானிப்பதன் மூலம், எல்லாக் காலத்திலும் முஸ்லிம்கள் தமது குடிமைப் பண்பை அநீதிக்கு எதிரான கூட்டுச் செயற்பாடுகளுக்கான ஒரு அடித்தளமாக மாற்றி வலுப்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்கிக் காட்டுவதே பரந்த நோக்கில் இந்தப் புத்தகத்தைப் பிரசுரிப்பதன் பின்னணியிலுள்ள குறிக்கோள். ஏனையவர்கள் ஏற்கனவே கூறியுள்ளவற்றை மீண்டும் எடுத்துரைப்பதோ; அல்லது நபி வரலாறு பற்றிய ஏனைய முந்தைய ஆய்வு முயற்சிகளில் செய்யப்பட்டுள்ளது போல், கொஞ்சம் மேலதிக விவரங்களுடன் காலக்கிரம ரீதியில் நபி வரலாற்றை எடுத்துரைப்பதோ எமது நோக்கம் அல்ல. மிகச்சிறந்த முன்மாதிரியென அல்லாஹ்வால் வருணிக்கப்பட்ட அண்ணல் நபிகளாரின் வரலாற்றின் ஊடாக, நாம் இங்கு நமது சமகாலப் பிரச்சினைகளுக்கு விடையளிக்கும் நோக்கில், விவரிப்பு அணுகுமுறையை விடுத்து பகுப்பாய்வு அணுகுமுறையை நோக்கி நகருவதற்கு முயற்சி செய்திருக்கிறோம்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 3)

Loading

ஒடுக்கப்படும் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது, அநீதிக்கு எதிராகப் பேசுவது போன்ற அதிமுக்கியப் பொறுப்புகளை ஒருவர் பலவீனராக இருக்கும் நிலையில் நிறைவேற்ற முடியாது. ஒடுக்குமுறையாளர்களை எதிர்கொள்வதற்கு அவரிடம் சக்தியும் அதிகாரமும் இருப்பது அவசியம். அண்ணல் நபியவர்கள் தாம் வென்றெடுத்த உலகியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட வழிமுறைகளில் ஒன்று என்ற வகையில், ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதில்லையென நீதமானவொரு உடன்பாட்டுச் சட்டகத்திற்குள் வரும்படி சூழவிருந்த பிராந்திய அதிகார மையங்களை நோக்கி அழைப்பு விடுத்தார்கள். பங்குபெறும் அனைத்துத் தரப்புகளின் சட்டபூர்வமான தேவைகளும் மதிக்கப்படும் விதத்தில் பரஸ்பர நலன்பயக்கும் நோக்கில் உடன்படிக்கை ஷரத்துகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொருவரின் உரிமைகளும் கடமைகளும் மிகத் தெளிவாக விரித்துரைக்கப்பட்டன. இத்தகைய ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்படும் சமயத்தில், அதனால் வரக்கூடிய தீங்கான பின்விளைவுகளைக் களையும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு சாத்தியமான சகலவித அரசியல் முயற்சிகளையும் முயன்றுபார்க்க வேண்டும் என்று நபிகளாரின் முன்னுதாரணம் காட்டுகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 2)

Loading

மக்காவில் நபியவர்கள் முன்வைத்த தூதுத்துவ அழைப்புக்கு மறுமொழியளித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட, துயருக்குள்ளாக்கப்பட்ட அடிமைகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மத்தியில் மேல்தட்டினரின் வாரிசுகள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் கூட தங்களின் புதிய இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி அவர்களின் குடும்பத்து மூத்தவர்களால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொஞ்சமும் பலியாகிவிடவில்லை. இஸ்லாத்தையோ அல்லாஹ்வின் தூதர் மீதான விசுவாசத்தையோ கைவிடுவதைக் காட்டிலும், தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவிப்பதையே அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்களின் தூதின் உண்மைத் தன்மையையும், மக்காவின் சமூக ஒழுங்கு மிகத் தீவிரமாகப் பழுதடைந்த ஒன்று என்பதையும் அவர்கள் முற்றாக நம்பினார்கள்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 1)

Loading

பெருமானார் எவ்வாறு அதிகாரத்தை வென்றெடுத்தார்கள்? அவர்கள் செய்துகொண்ட எண்ணற்ற உடன்படிக்கைள், அந்த அதிகாரத்தை வலுவூட்டுவதில் எத்தகைய பாத்திரம் வகித்தன? நபிவரலாறு பற்றிய ஆய்வாளர்கள் நபிகளாருடைய கடிதங்கள், உடன்படிக்கைகள், ஆவணங்கள் என இதுநாள்வரை 250 முதல் 300 வரையானவற்றை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அசல் கடிதங்களில் சில இன்றும் பாதுகாப்பாக பேணப்பட்டு வருகின்றன. எழுத்துத் திறன்கள் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காத அந்தக் காலத்திலேயே, நபியவர்களாரின் கடிதங்களும் உடன்படிக்கை ஆவணங்களும், அதேபோல குர்ஆனின் அனைத்து வேதவெளிப்பாடுகளும் மிகவும் கவன சிரத்தையுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதை பார்க்கும்போது வெகுசுவாரஸ்யமாக இருக்கிறது. இத்தனைக்கும் அப்போது மக்காவில் வெறும் 17 பேருக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம் – ஸஃபர் பங்காஷ்

Loading

ஆக, முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் சவூதுக் குடும்பத்தின் விருப்பு வெறுப்புகளை பின்பற்றுவதா? அல்லது, அல்லாஹ் சுப்ஹானஹு வ தஆலாவின் கட்டளைகளையும் அவனது அன்புத் தூதரின் (ஸல்) வழிமுறையையும் பின்பற்றுவதா?

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

அண்ணலாரின் வாழ்வில் அதிகாரப் பரிமாணங்கள் – ஸஃபர் பங்காஷ்

Loading

இறைத்தூது வழங்கப்பட்ட தனியொரு மனிதராகத் துவங்கிய அண்ணலார் எவ்வாறு வெகு குறுகியதொரு காலத்திற்குள், அரபுகளின் சமூக அடிப்படைகளை முற்றாக மாற்றி மறுவரைவிலக்கணம் செய்து, புதியதொரு நாகரிகத்தின் தோற்றத்துக்கு வித்திட்டார்கள் என்பது நாம் ஆழ்ந்து கற்க வேண்டியதொரு அம்சமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்

Loading

“இது வெறுமனே நமது பாரம்பரியம் மட்டுமல்ல; இது இறைத்தூதரின் (ஸல்) வரலாற்றுக்கான ஆதாரம்” என்கிறார் டாக்டர் அலவீ. “இப்போது நாம் என்ன கூறுவது? ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா?… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன?” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம்! அதைத் தான் இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் மும்முரமாக துடைத்தழித்துக் கொண்டிருக்கின்றனர்”.

மேலும் படிக்க