கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பழவேற்காடு அறபு வம்சாவளிகளும் பழங்காலப் பள்ளிவாசலும்

இந்த அறபுக் குடும்பம் ஹிஜ்ரி 235ல் (கி.பி.852) மக்காவை விட்டு புறப்பட்டதாகவும் 500 ஆண்டுகள் கடலிலும், கடற்கரையோரங்களில் இடைநிறுத்தம் செய்து கடைசியாக ஹிஜ்ரி 750 (கி.பி.1350) வாக்கில் இங்கு பழவேற்காடு வந்து சேர்ந்ததாகவும் கூறினார். இது மிகச் சரியாக இப்னு பதூதா (1304 -1368) தென்னிந்தியாவுக்கு வந்து சேர்ந்த காலத்தோடு கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. மதுரை வரை வந்த இப்னு பதூதா இங்கு ஏற்கனவே அறபுக் குடியேற்றங்களைக் கண்டு திகைத்துப் போய் எழுதி வைத்ததும் வரலாறு.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அழிவின் விளிம்பில் அடையாளச் சின்னங்கள்

தமிழக முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது. நீண்ட பாரம்பரியம் மிக்கது. எனினும், தமிழக வரலாற்றுப் பக்கங்களில் இவர்களுக்குரிய இடம் இல்லை. தங்களின் வரலாற்றைப் பதிவு செய்வதிலும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாப்பதிலும் இவர்கள் பின்தங்கியுள்ளனர். இச்சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் அடையாளச் சின்னங்கள் பலவும் அழிந்துவிட்டன. அறியாமையாலும் அலட்சியத்தாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இஸ்லாமிய அமைப்புகளும் மார்க்க அறிஞர்களும் வரலாற்று ஆர்வலர்களும் சமூக அக்கறை கொண்டவர்களும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். காலம் தாழ்த்தினால் எதுவும் மிஞ்சாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்

“இது வெறுமனே நமது பாரம்பரியம் மட்டுமல்ல; இது இறைத்தூதரின் (ஸல்) வரலாற்றுக்கான ஆதாரம்” என்கிறார் டாக்டர் அலவீ. “இப்போது நாம் என்ன கூறுவது? ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா?… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன?” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம்! அதைத் தான் இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் மும்முரமாக துடைத்தழித்துக் கொண்டிருக்கின்றனர்”.

மேலும் படிக்க