இலக்கியம் கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அறபு மலையாள இலக்கியத்தில் அறபுத் தமிழின் செல்வாக்கு

Loading

அறபு மலையாள இலக்கியத்தின் அடித்தளம் அறபுத் தமிழ் இலக்கியத்திலிருந்து எழுந்துள்ளதால் அதன் ஆய்வுகளை அறபுத் தமிழ் வரலாற்றிலிருந்து தொடங்க வேண்டும் என்பது அறபு மலையாள ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான வழிவகைகளை அறபுத் தமிழ் ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ‘அறபு மலையாள இலக்கியத்தில் அறபுத் தமிழின் செல்வாக்கு’ என்ற தலைப்பில் இந்த ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அழிவின் விளிம்பில் அடையாளச் சின்னங்கள்

Loading

தமிழக முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது. நீண்ட பாரம்பரியம் மிக்கது. எனினும், தமிழக வரலாற்றுப் பக்கங்களில் இவர்களுக்குரிய இடம் இல்லை. தங்களின் வரலாற்றைப் பதிவு செய்வதிலும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாப்பதிலும் இவர்கள் பின்தங்கியுள்ளனர். இச்சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் அடையாளச் சின்னங்கள் பலவும் அழிந்துவிட்டன. அறியாமையாலும் அலட்சியத்தாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இஸ்லாமிய அமைப்புகளும் மார்க்க அறிஞர்களும் வரலாற்று ஆர்வலர்களும் சமூக அக்கறை கொண்டவர்களும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். காலம் தாழ்த்தினால் எதுவும் மிஞ்சாது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மாப்பிளப் பாட்டுகளின் தாய்வேர் தமிழ்

Loading

மலையாளத்தின் மீது ஏற்பட்ட சமஸ்கிருத ஆதிக்கம் காரணமாக மணிப்பிரவாள நூல்கள் தோன்றின. வைதீக மொழியான சமஸ்கிருதத்துடன் முஸ்லிம்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை. ஆனால் அறபியும் தமிழும் இவர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தின. எனவேதான் மலையாள மொழியில் காணமுடியாத நூற்றுக்கணக்கான பழந்தமிழ்ச் சொற்கள் மாப்பிள்ளை இலக்கியங்களில் காணப்படுகின்றன.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஒரு கடலோரக் கிராமத்து நினைவுகள்

Loading

இதுபோன்று ஒருநாள் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலை இரவு உணவிற்குப் பின் (இரவு 8.30) என்னுடைய சகோதரி வாசிக்க நாங்கள் குழுமியிருந்து கேட்டோம். இரண்டு இரவுகளில் வாசித்து முடித்தோம். அப்போது எனது மூத்தும்மா (பெரியம்மா) அதில் வரும் சம்பவங்களை இடையிடையே நிறுத்தி விளக்கினார். அவருக்கு அப்போது (1988) அறுபத்தைந்து முதல் எழுபது வயதிற்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் இடையிடையே அதில் இடம்பெறும் பல சம்பவங்களையும் அவர்களால் விளக்கமுடிந்தது. மீண்டும் ஒருமுறை அந்த நாவல் அவ்வாறு படிக்கப்பட்டது. நாவலை முடித்தபோது சில விசயங்கள் கதையில் மிகைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளதாகவும், முக்கால் பங்கு சம்பவங்கள் உண்மை என்றும், சில சம்பவங்கள் அவர்கள் காலத்தில் நடந்ததாகவும், சில அவர்களுக்கு முந்தைய தலைமுறையில் நடந்து கேள்விப்பட்டிருப்பதாகவும் கூறினார். நாவல் என்றால் புனைவுகள் இருக்கும் என்பது பெரியம்மாவிற்குத் தெரியாமல் இருந்தது.

மேலும் படிக்க