நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஒரு கடலோரக் கிராமத்து நினைவுகள்

இதுபோன்று ஒருநாள் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலை இரவு உணவிற்குப் பின் (இரவு 8.30) என்னுடைய சகோதரி வாசிக்க நாங்கள் குழுமியிருந்து கேட்டோம். இரண்டு இரவுகளில் வாசித்து முடித்தோம். அப்போது எனது மூத்தும்மா (பெரியம்மா) அதில் வரும் சம்பவங்களை இடையிடையே நிறுத்தி விளக்கினார். அவருக்கு அப்போது (1988) அறுபத்தைந்து முதல் எழுபது வயதிற்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் இடையிடையே அதில் இடம்பெறும் பல சம்பவங்களையும் அவர்களால் விளக்கமுடிந்தது. மீண்டும் ஒருமுறை அந்த நாவல் அவ்வாறு படிக்கப்பட்டது. நாவலை முடித்தபோது சில விசயங்கள் கதையில் மிகைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளதாகவும், முக்கால் பங்கு சம்பவங்கள் உண்மை என்றும், சில சம்பவங்கள் அவர்கள் காலத்தில் நடந்ததாகவும், சில அவர்களுக்கு முந்தைய தலைமுறையில் நடந்து கேள்விப்பட்டிருப்பதாகவும் கூறினார். நாவல் என்றால் புனைவுகள் இருக்கும் என்பது பெரியம்மாவிற்குத் தெரியாமல் இருந்தது.

மேலும் படிக்க