முஸ்லிம் பாரம்பரியத்தில் செஸ் விளையாட்டு
இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பாரசீகத்தை ஆளத் தொடங்கிய பிறகே மேற்காசியாவில் இந்த விளையாட்டு வேகவேகமாகப் பரவ ஆரம்பித்தது. அரபு மக்களுள் பெரும் பகுதியினர் இதை விளையாடலாயினர். செஸ் விளையாட்டு அப்போது ‘ஷத்ரஞ்’ என்று அழைக்கப்பட்டது.
அறபு இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பாரசீகத்தை வசப்படுத்தியது செஸ் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததாய் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஏனெனில், முஸ்லிம் ஆட்சியாளர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் இந்த விளையாட்டையும் கொண்டு சேர்த்தனர். இவர்கள் ஆளும் பகுதிகளுக்கு வரும் பயணிகளும் இதை அவரவர் பிரதேசங்களுக்குக் கொண்டு போயினர்.
மேலும் படிக்க