குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

சமூகத் தொண்டர் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு: அமித்ஷா பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லா

Loading

பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடியவரும் பீமா கோரேகான் வழக்கில் சிறைவைக்கப்பட்டவருமான அருட்தந்தை ஸ்டேன் சுவாமி (84) இன்று மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார். நீண்ட நாட்களாக அவரின் உடல்நிலையையும் கொரோனா பரவலையும் கருத்தில் கொண்டு அவருக்குப் பிணை வழங்குமாறு கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார். இதையொரு நிறுவனக் கொலை என்கின்றனர் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். இது தொடர்பாக மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சமூகத் தொண்டர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் இன்று மும்பை மருத்துவமனை ஒன்றில் மரணித்த செய்தி ஆறாத் துயரத்தை அளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வந்தவர் ஸ்டேன் சுவாமி. ஆதிவாசி மக்களின் நிலத்தைச் சூறையாடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நீதிமன்றம் உள்ளிட்ட உரிமைப் போராட்டங்களை நடத்திக்…

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

முஸ்லிம் வெறுப்புக் குற்றத்தை பூசி மெழுகும் உ.பி. போலிஸ்

Loading

காஸியாபாத்தைச் சேர்ந்த 72 வயதான முஸ்லிம் முதியவர் அப்துல் சமது சைஃபி தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. “ஜெய் ஸ்ரீராம்” என முழங்குவதற்கு அவர் கட்டாயப்படுத்தப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதோடு, அவரது தாடியையும் நறுக்கி அவமானப்படுத்தியது ஒரு கும்பல்.

மேலும் படிக்க
காஷ்மீர் கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

குணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்!

Loading

குணன் பொஷ்போரா கிராம மக்களுக்கு ராணுவம் மட்டும் இம்மாபெரும் அநீதியை இழைக்கவில்லை; காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் என எல்லா நிறுவனங்களும் ஒன்றிணைந்துதான் 30 ஆண்டுகளாக அவர்களுக்கு நீதியை எட்டாக்கனியாக்கியுள்ளன. ஆனாலும் நீதிக்கான கஷ்மீரிகளின் போராட்டம் தொய்வின்றி தொடர்கிறது. அந்த வகையில், பிப்ரவரி 23ம் தேதியான இன்று கஷ்மீர் பெண்களின் போராட்ட நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

ஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை

Loading

ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட “சட்டவிரோத பங்களாதேசிக் குடியேறிகள்” என்ற பிரச்சினை பின்னர் “பங்களாதேசி முஸ்லிம் குடியேறிகள்” என்பதாக மாறி, இப்போது அஸ்ஸாமிலுள்ள முஸ்லிம்கள் அனைவருடைய குடியுரிமையையும் காவு வாங்கிடத் துடிக்கும் ஓர் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

மேலும் படிக்க