கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அபாயத்தில் ஓர் தமிழ் அகதி!

Loading

ஒன்று இந்தியாவில் அவருக்குத் தஞ்சம் அளிக்க வேண்டும். இந்தியாவில் இருக்க அவருக்கு அனுமதி இல்லை என்றால், எந்த நாடு அவருக்குத் தஞ்சம் அளிக்கிறதோ அங்கு செல்ல அவரை அனுமதிக்க வேண்டும். இதுதான் அவரது நிலைக்கு எடுக்கப்படும் சரியான முடிவாக இருக்க முடியும். அதை விடுத்து, அவரை இலங்கைக்கு நாடுகடத்துதல் எந்தச் சட்ட அடிப்படையில் நியாயமாக இருக்கும்?

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் ஒரு முள்வேலி முகாம்

Loading

“என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”, “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”   தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு
இரத்தம்  வழியவழியக் கத்தும் குரல் வீடியோவில் தனித்து ஒலித்து உருக்கி எடுக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் ஓடும் விமானத்திலிருந்து விழுந்த மனித உயிர்களுக்கு உலகமே இரங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், கொடூரத்தில் அதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத இந்த வீடியோ அதிகக் கவனம் பெறாமல் சிலரால் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் நடப்பது ஆஃப்கானிஸ்தானிலோ ஆஃப்பிரிக்காவிலோ அல்ல, தமிழ்நாட்டில்தான். கதறும் குரல்களும் தமிழில்தான் ஒலிக்கின்றன. கதறிக்கொண்டிருப்பது ஒரு குரல் மட்டும் அல்ல. கிட்டத்தட்ட 80 பேர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் “தமிழ் அகதிகள்”

Loading

இலங்கையில் இன மோதல் காரணமாகத் தமிழ்நாட்டில் சுமார் 110 முகாம்களில் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் அகதிகள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். மொழியாலும், பண்பாட்டாலும் பல ஒற்றுமைகள் இருக்கும் தமிழ் நிலத்தில் தமிழர்கள் அகதிகளாக இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருவது வேதனைக்குரியது. தமிழ் அகதிகள் நிலையை மாற்ற பல்வேறு மட்டங்களில் உரையாடல்கள் உருவாக்க வேண்டியுள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு தமிழ் அகதிகள் தொடர்பில் இந்திய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டு அரசு, சட்டம் மற்றும் முகாம் அமைப்புகள் எப்படி உள்ளன என்பதில் சில புரிதல்களை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இது அந்த மக்கள் சந்தித்து வரும் சிக்கலான நிலையை வெளிப்படுத்த உதவும் என்று நினைக்கின்றேன்.

மேலும் படிக்க