குறும்பதிவுகள் 

காவல்துறை ரவுடிசம் செய்தால் பரவாயில்லையா?

Loading

இதைவிட பன்மடங்கு கோர முகம் காவல்துறைக்கு உண்டு. தூத்துக்குடியையும் மெரினா போராட்டத்தையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் தானே? அப்பாவித்தனமாக காவல்துறையின் வரம்புமீறலை நியாயப்படுத்தாதீர்கள். நீதிமன்றம், சட்டம் எல்லோருக்குமானது. இதில் காவல்துறைக்கு விதிவிலக்கு கிடையாது. குடிமக்கள் மட்டுமல்ல போலீஸ்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டாலும் அது ரவுடிசம்தான்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… (அறிமுகம்)

Loading

இந்தப் புத்தகம் தவறான வாசிப்புக்குள்ளாகும் சாத்தியம் இருப்பதால் அது குறித்த ஒரு சுருக்கமான எச்சரிக்கை. தீவிரவாதத் தாக்குதல்களை சில வேளைகளில் அறவியல் அடிப்படையில் நியாயப்படுத்த முடியும் என நான் வாதிடவில்லை. என்னை வியப்புக்குட்படுத்தும் உண்மை என்னவென்றால் நவீன அரசுகள் முன்னெப்போதையும் விட எளிமையாகவும், பாரிய அளவிலும் மனிதர்களை அழித்து, சிதறடிக்கும் வலிமையைப் பெற்றிருக்கின்றன என்பதும், இத்தகைய ஆற்றலின் அருகில் கூட தீவிரவாதிகளால் நெருங்க முடியாது என்பதும்தான். நிறைய அரசியல்வாதிகள், பொது அறிவுஜீவிகள், இதழியலாளர்கள் ஆகியோர் மற்ற மனிதர்களைக் கொல்வது, இழித்துரைப்பது போன்றவற்றை மிகுந்த அறிவுக்கூர்மையோடு செய்வதும் என்னைத் துணுக்குறச் செய்கிறது. இவர்களின் பிரச்சினை கொல்வதோ, மனிதாயநீக்கம் செய்வதோ இல்லை, மாறாக எப்படிக் கொல்வது மற்றும் என்ன நோக்கத்துக்காக என்பதுதான் என்றே தோன்றுகிறது.

மேலும் படிக்க