கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழகத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு: தேவைகள், சிக்கல்கள், தீர்வுகள் – அ.மார்க்ஸ்

Loading

முஸ்லிம்களின் பிரச்னைகள் இன்றும் பல தளங்களில் உள்ளன. அரசு நலத்திட்டங்களின் பங்கு, கடன் வசதி பெறுதல், தனியார் துறைகளில் ஒதுக்கீடு, மதரசாக் கல்விக்கு உரிய ஏற்பு, வக்ஃப் சொத்துகளை மீட்டு முஸ்லிம்களுக்குப் பயனுடையதாக ஆக்குதல், தொகுதிச் சீரமைப்பு, முனிசிபாலிடி மற்றும் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு என எத்தனையோ விவகாரங்கள் இருக்கின்றன. 3.5% இடஒதுக்கீடு ஆணை பெற்றதோடு முஸ்லிம் இயக்கங்களின் பணி ஓய்ந்துவிடவில்லை என்பதையும், சிறுபான்மை மக்களின் உரிமை கோரலை வெறும் இடஒதுக்கீடு என்பதோடு நிறுத்திக்கொண்டால் அதில் பெரியளவுக்குப் பயனிருக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் 

செக்குலர் இந்தியாவில் முஸ்லிம்கள்

Loading

தனிக்கட்சியாக அதிகாரம் செலுத்துவதை விட்டும் காங்கிரஸ் சரிந்ததிலிருந்து, இந்தியாவில் கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. அரசியலமைப்பு வழியாக முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தால், இந்தியக் கூட்டணி ஆட்சிச் சூழலில் அவர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை ஆகியிருக்கும். இது போதாதென்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், தேர்தல்களில் கணிசமான தாக்கம் ஏற்படுத்தக் கூடியளவு முஸ்லிம்கள் செறிந்து வாழும் தொகுதிகளெல்லாம் பெரும்பாலும் பிற சாதியினருக்கு ஒதுக்கப்பட்டன. மேற்சொன்ன வகைகளில், இந்திய மதச்சார்பின்மை என்பது வேறொரு பெயரிலான இந்து நம்பிக்கைவாதம் (confessionalism) தான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

படேல் சாதியினர் ஏன் போராடுகிறார்கள்?

Loading

படேல்களின் போராட்டத்தை இந்துத்துவ அமைப்புகள் வரவேற்பதோடு, அதை ஊக்குவிக்கிறார்கள். அத்தோடு, தம் செயல்திட்டத்தை கட்சிதமாக நிறைவேற்றிவிட முயற்சி செய்கிறார்கள். குஜராத் படேல் சாதியினரின் போராட்டத்தை வழிநடத்தும் ஹர்திக் படேல் சொல்கிறார், ‘சர்தார் வல்லபாய் படேல், பால் தாக்ரே வழியே என் வழி’ என்று. இந்தப் போராட்டமெல்லாம் இந்துத்துவ அமைப்புகளின் திட்டத்தை நிறுவுவதற்கே ஒருங்கிணைக்கப் படுகின்றன என்பதற்கு ஹர்திக் சொன்ன இவ்வார்த்தை ஒன்றே போதுமானது. படேல் இனத்தவர்கள் எப்படி ஒன்றிணைக்கப்படுகிறார்கள் என்பதையும் இதனூடாக ஊகிக்க முடிகிறது.

மேலும் படிக்க