law student abdul raheem issue கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அப்துல் ரஹீம் விவகாரமும் காவல்துறை சீர்திருத்தமும் – அ.மார்க்ஸ்

Loading

1. 2014 தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி காவல்துறைச் சீர்திருத்தம் குறித்துப் பேசியிருந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. வெற்றிபெற்றிருந்தாலும் அது அந்த திசையில் நகர்ந்திருக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

2. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிவேண்டி உறுதியுடன் நின்று போராடினாலும் உடனடியாக நீதி கிடைப்பது கடினம். தொடக்கத்தில் அவர்கள் உறுதியாக நின்றாலும் கடைசிவரை அதைத் தொடரமுடிவதில்லை. நம் குற்ற நடைமுறை தொடர்பான வழமைகளும் இப்படியான அத்துமீறல்கள் பிரச்சினையில் மக்களுக்கு எதிராகவே உள்ளன.

3. நீதிபதி அனந்த நாராயண் முல்லா அவர்களின் ஒரு முக்கியத் தீர்ப்பு இங்கே குறிப்பிடத்தக்கது. “எந்த ஒரு கிரிமினல் கும்பலைக் காட்டிலும் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட காவல்துறையே பெரிய கிரிமினல் கும்பல்” – என்கிற புகழ்பெற்ற கருத்தை முன்வைத்த நீதியரசர் முல்லா அவர்களின் இவ் வாசகங்களை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. இப்படியான அவரது தீர்ப்பு நேர்மையான போலிஸ்காரர்களின் உற்சாகத்தைக் கெடுத்துவிடும் எனக் கூறி அதைத் தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக் காவல்துறை முறையீடு செய்தபோது, “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்ல மீனைத் தேடும் முட்டாள் நானல்ல” எனக் கூறி அவர் அந்த மனுவைத் தள்ளுபடி செய்யவும் செய்தார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பெங்களூரு வன்முறை: கலவரங்களின் அரசியல்

Loading

ஏற்கனவே பெங்களூரு வன்முறையால் மூன்று உயிர்கள் பறிபோயுள்ளன, அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக காவல்துறை மேற்கொள்ளும் அதிகப்படியான கைது நடவடிக்கைகள், தீவிரவாத சதித் திட்டமாக சித்தரிக்க முயற்சித்தல், கொடூரமான ‘உபா’ (UAPA) சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறுவது, வன்முறையால் ஏற்பட்ட இழப்பீட்டை கலவரக்காரர்களிடம் வசூலிப்போம் என யோகி ஆதித்யநாத் பாணியில் எடியூரப்பா சூளுரைப்பது முதலானவை புதிய புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கக் கூடிய முனைவுகளாக உள்ளன. பிரச்னைகளை சரிசெய்கிறேன் எனக் கிளம்புபவர்களே பிரச்னையின் ஒரு பகுதியாகவோ ஊற்றுக்கண்ணாகவோ இருப்பதுதான் இங்கு ஆகப்பெரிய பிரச்னை!

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்

Loading

சென்னை, சேலம், கோவை, வேலூர், புதுக்கோட்டை, அலங்காநல்லூர் முதலான இடங்களில் கூடியிருந்த மக்களைக் காவல்துறையினர் வன்முறையாக வெளியேற்றத் துவங்கினர். வெளியேற மறுத்தவர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறையினரே வாகனங்களைக் கொளுத்துகிற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. மெரினாவில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் வாகனங்களைப் போலீசாரே தாக்கி உடைத்தனர். சில இடங்களில் அவை எரியூட்டவும் பட்டன.

மேலும் படிக்க