குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

சமூகத் தொண்டர் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு: அமித்ஷா பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லா

Loading

பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடியவரும் பீமா கோரேகான் வழக்கில் சிறைவைக்கப்பட்டவருமான அருட்தந்தை ஸ்டேன் சுவாமி (84) இன்று மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார். நீண்ட நாட்களாக அவரின் உடல்நிலையையும் கொரோனா பரவலையும் கருத்தில் கொண்டு அவருக்குப் பிணை வழங்குமாறு கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார். இதையொரு நிறுவனக் கொலை என்கின்றனர் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். இது தொடர்பாக மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சமூகத் தொண்டர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் இன்று மும்பை மருத்துவமனை ஒன்றில் மரணித்த செய்தி ஆறாத் துயரத்தை அளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வந்தவர் ஸ்டேன் சுவாமி. ஆதிவாசி மக்களின் நிலத்தைச் சூறையாடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நீதிமன்றம் உள்ளிட்ட உரிமைப் போராட்டங்களை நடத்திக்…

மேலும் படிக்க