கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பெண்ணியவாதம் ஆபத்தானதா?

Loading

தற்காலத்தில் கல்வி, கலை, இலக்கியம், சட்டம் என அனைத்து மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்த வல்ல கருத்தியலாக பெண்ணியவாதம் உள்ளது. மட்டுமின்றி, நவீன பொதுப்புத்தியிலும் அது பலத்த செல்வாக்கு செலுத்தி வருகிறது. இச்சூழலில், இஸ்லாமியச் சட்டகத்திலிருந்து பெண்ணியத்தை அதற்கே உரிய இடத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதன் ஒரு முயற்சியாக, “Is Feminism Dangerous?” என்ற தலைப்பில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய அழைப்பாளர் டேனியல் ஹகீகத்ஜூ, ஹார்வேர்ட் மெடிக்கல் ஸ்கூலில் ஆற்றிய உரையை சுருக்கி தமிழாக்கியுள்ளோம்.

மேலும் படிக்க
இஸ்லாமிய பெண்ணியம் கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்! – உம்மு ஃகாலிது

Loading

தொடர்ச்சியாகவும் நீண்ட காலமாகவும் பெண்களிடம் பொய் சொல்லப்பட்டு வந்துள்ளது. பலர் ஒன்றிணைந்து தமது சுயலாபங்களுக்காகப் பெண்களை ஏமாற்றிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆணாதிக்கம் பற்றியோ, முஸ்லிம் ஆண்கள் பற்றியோ நான் பேசுவதாக எண்ண வேண்டாம். சில மேற்கத்திய சூன்யவாத நாத்திக மேட்டுக்குடிகளைப் பற்றிப் பேசுகிறேன். தமது சொந்த அஜென்டாக்களுக்காக, அவர்கள் பெண்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் சமூக வழமைகள் சிலவற்றை மாற்றி, இயந்திரங்களைப் போல மக்களைக் குறிப்பிட்ட வழியில் இயக்கியிருக்கிறார்கள்.ஊடகங்கள், ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், புத்தகங்கள், நாவல்கள், பிரபல பத்திரிகைகள், பாடல் வரிகள், புகழ்பெற்ற கல்விநிலையங்கள் முதலானவற்றின் மூலம் உலகெங்கும் அவர்கள் பொய்யைப் பரப்பியிருக்கிறார்கள். அமெரிக்கத் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஆறு சீசன்கள் வரை ஒளிபரப்பப்பட்ட தொடர் “செக்ஸ் அண்ட் த சிட்டி” (Sex and the City). அதன் மையக் கருத்து இதுதான்: ஒரு நவீனப் பெண் வாழ்வில்…

மேலும் படிக்க
நூல் அறிமுகம் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

‘ஃபெமோ நேஷனலிசம்’ என்றால் என்ன? – சாரா ஃபாரிஸ் நேர்காணல்

Loading

‘பெண் உரிமைகளின் பெயரால்: ஃபெமோ நேஷனலிசத்தின் எழுச்சி’ எனும் தலைப்பிலான ஆர்வமூட்டும் புத்தகம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சாரா ஃபாரிஸ். அதில் வலதுசாரி தேசியவாதிகளும் நவதாராளவாதிகளும் சில பெண்ணியவாதிகளும் பாலினச் சமத்துவம் கோரும் முகமையைச் சேர்ந்தோரும் முஸ்லிம் ஆண்களைப் பூதாகரப்படுத்தும் நோக்கிலும், தங்கள் சொந்த அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காகவும் பெண் உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்வதை ஆராய்கிறார். இந்தத் தரப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்கிடையே முரண்படுபவையாகத் தெரிந்தாலும், ஒரு புள்ளியில் இவை சந்தித்துக்கொள்வதில் முக்கியமானதொரு அரசியல்-பொருளாதாரப் பரிமாணம் இருப்பதாக அவர் வாதிடுகிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பெண் என்பவள்…

Loading

பெண்ணியம் என்பது ஓர் அரசியல் நிலைப்பாடு. அதன் கண்ணோட்டத்தில் நின்று நாம் பெண்களைப் பார்த்தால் ஏமாந்துவிடுவோம். ஆண்களுக்கு எதிராக அது உருவாக்கி வைத்திருக்கும் சொல்லாடல்கள் போட்டி மனப்பான்மையை, காழ்ப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அதன் கண்ணோட்டங்கள் பெரும்பாலும் பாசாங்கானவை.

மேலும் படிக்க