ex muslim tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘முன்னாள் முஸ்லிம்கள்’ உருவாகக் காரணமென்ன?

Loading

முன்னாள் முஸ்லிம்கள் (Ex-Muslims) என்ற பெயரில் உலவும் ஒருசிலர், இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தொடர்ச்சியாக எதிர்மறையான கருத்துகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதை உங்களில் சிலர் கவனித்திருக்கக்கூடும். கருத்தாழம் ஏதுமின்றி, மிகவும் மேம்போக்கான குற்றச்சாட்டுகளையும், மீம் மாதிரியான கேலி கிண்டல்களையும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, சாமானிய முஸ்லிம்களைச் சீண்டி மகிழ்வது என்ற அளவில் இவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன.

கல்வியாளர் சைமன் கோட்டீ எழுதிய The Apostates என்ற சமூகவியல் ஆய்வு நூல் இவர்களைப் பற்றிய முழுமையான பார்வையை வழங்குகிறது. 2015ல் வெளியான இந்நூல், பிரிட்டனிலும் கனடாவிலும் வசிக்கும் ‘முர்தது’கள் (முன்னாள் முஸ்லிம்கள்) தொடர்பானது. முர்ததுகள் தங்களைப் பற்றியும், இஸ்லாத்தை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகரமான அனுபவங்கள் பற்றியும் அளிக்கும் வாக்குமூலத்தை இந்நூல் பிரதானமாகப் பதிவுசெய்கிறது. அந்தப் புத்தகம் முன்வைக்கும் கருத்துகளின் அடிப்படையில் எமது பார்வைகளையும் சேர்த்து வழங்க முனைகிறது இந்த ஆக்கம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 6

Loading

முஸ்லிம்கள் தமக்கிடையே கருத்து வேறுபடுவதற்கும், ஒருவரையொருவர் மிகக் கடுமையாக விமர்சித்துக் கொள்வதற்குமான உரிமையை இஸ்லாம் மறுத்துவிடவில்லை. ஆனால் இத்தக்ஃபீரிகளின் பிரச்சினை என்னவென்றால், தமக்கு மாறுபட்ட புரிதல்கள் கொண்ட முஸ்லிம்கள் அனைவரையும் இவர்கள் ‘தக்ஃபீர்’ எனும் கண்ணாடி வழியே மட்டும்தான் பார்க்கிறார்கள்.

மேலும் படிக்க