கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 7

ஏகாதிபத்தியவாதிகளும் ஸியோனிஸ்டுகளும் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி அப்பாவி முஸ்லிம்களை அழித்து வருவதற்கு பழிவாங்கும் முகமாகவே தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தி, எதிரிகளின் பாதுகாப்பை உருக்குலைக்க முனைகிறோம் என்று கூறி, போரில் ஈடுபடாத பொதுமக்களின் மீது தாம் நடத்தும் படுகொலைகளுக்கு உலக முஸ்லிம்களின் மனங்களில் ஒருவித சட்டஏற்பினை ஏற்படுத்த முனைகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 6

முஸ்லிம்கள் தமக்கிடையே கருத்து வேறுபடுவதற்கும், ஒருவரையொருவர் மிகக் கடுமையாக விமர்சித்துக் கொள்வதற்குமான உரிமையை இஸ்லாம் மறுத்துவிடவில்லை. ஆனால் இத்தக்ஃபீரிகளின் பிரச்சினை என்னவென்றால், தமக்கு மாறுபட்ட புரிதல்கள் கொண்ட முஸ்லிம்கள் அனைவரையும் இவர்கள் ‘தக்ஃபீர்’ எனும் கண்ணாடி வழியே மட்டும்தான் பார்க்கிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 5

‘இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான மன்ஹஜ் (முறைமை)’ என்றும், ஆக்கிரமிப்புப் படைகளை முறியடிப்பதற்கான இராணுவ தந்திரம் என்றும் இவர்கள் முன்வைக்கும் மாபாதகங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாகவே இப்பதிவில் பேசவிருக்கிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 4

தம்முடைய ‘ஃகிலாஃபாவுடன்’ போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள், கடற்கரை போன்று பெருந்திரளாக மக்கள் கூடும் இடங்களைத் தெரிவுசெய்து, துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், வாகனங்களை ஓட்டி நசுக்கியும் இயன்றளவு அதிக எண்ணிக்கையில் பொதுமக்களை கொன்று குவிப்பதில் உள்ள இவர்களின் ‘நியாயத்தை’ புரிந்துகொள்ளாத நாமெல்லாம் ‘மேற்கத்திய விபச்சார ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு’ பலியாகி உள்ளவர்களாம்!

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 3

முதற்கட்டமாக, அவர்கள் யாரைக் கொலை செய்யப் போகிறார்களோ அல்லது யார் மீது தாக்குதல் நடத்தப் போகிறார்களோ அவர்கள் மீது ஒன்று வெளிப்படையான தக்ஃபீரை பிரகடனம் செய்கிறார்கள்; அல்லது, அவர்களைக் கொலை செய்வது ஆகுமானதே என்பதற்கு மிகத் தளர்வானதும் நீதியற்றதுமான சாக்குபோக்குகளை முன்வைக்கிறார்கள். இதன் மூலம் அவர்களைக் கொலை செய்வதற்கான ‘சட்டபூர்வ ஏற்பினை’ மோசடியாக உருவாக்குகிறார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 2

இஸ்லாத்தின் சில அடிப்படையான விடயங்கள் தொடர்பாக தமது புரிதலுக்கு மாற்றமான புரிதல்களை கொண்டிருக்கும் பிற முஸ்லிம்களின் மீது “இறைநிராகரிப்பு” (குஃப்ரு) குற்றம் சுமத்தி, அவர்களின் உயிரையும் உடமைகளையும் ஆகுமாக்கிக் கொள்வதில் மிகத் தாராளமான போக்கினை கைக்கொள்ளும் மனநிலை கொண்டவர்களையும், அதை நடைமுறையில் செயல்படுத்த முனைபவர்களையும் குறித்தே நான் இங்கு ‘தக்ஃபீரிகள்’ என்று பேசுகிறேன்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1

‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், எதிரிகளின் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்து குதித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க