கட்டுரைகள் 

அறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா? ஆம் முரண்படுகிறது.

Loading

பலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் கிடையாது. குறைந்தபட்சம் இன்றளவில் கிடையாது. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிடவும் முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கின்ற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்றதொரு செயலாகும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் கேள்வி-பதில்கள் மொழிபெயர்ப்பு 

ஹிஜாப் சட்டம் எந்த விதத்தில் ஒடுக்குமுறையானது?

Loading

பொது இடங்களுக்கான முஸ்லிம் உடை ஒழுங்குகள் என்பவை இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைந்தவை. உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டும், எதனை மறைக்கக் கூடாது என்பது குறித்த நம்முடைய நம்பிக்கையானது இறைவழிகாட்டுதல்களிலிருந்து வருவது. இறைவனை நம்புகிறவர்கள் என்ற அடிப்படையில் நாம் அந்த இறைவழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு, அவற்றின் அகிலத்துவ முக்கியத்துவத்தையும் மெய்யறிவையும் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறோம். பிறருக்கு இவை எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் முஸ்லிம்களிடத்தில் இவ்வுயர் விதிகளிலிருந்து பிறக்கும் தர்க்க நியாயமேனும் இருக்கின்றது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க