குறும்பதிவுகள் 

மால்கம் எக்ஸ்: கண்டெடுக்கப்பட்ட புதிய பக்கங்கள்

Loading

ஆனால், சமீபத்தில் சில கையெழுத்துப் பிரதிகள் கிடைத்துள்ளன. தற்போதைய தன்வரலாற்று நூலில் இடம்பெறாத பலவும் அதில் உள்ளன. நூலின் கட்டமைப்பையுமே கூட மால்கம் எக்ஸ் முற்றிலும் வேறுவிதமாகத் திட்டமிருந்தது இவற்றின் வழி தெரியவந்துள்ளது. தன் வாழ்க்கைப் பரிணாமத்தை வெறும் மூன்று அத்தியாயங்களில் சுருக்கிக் கொண்டு, எஞ்சிய அத்தியாயங்களில் கறுப்பின மக்களின் விடுதலைக்கான போராட்ட வரலாற்றை உரை (speech) வடிவிலான அத்தியாயங்களாக அமைக்கத் திட்டமிட்டிருந்திருக்கிறார் மால்கம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்?

Loading

தமிழகத்தின் மத்தியச் சிறைகளில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நீண்ட கால சிறைவாசத்தை அனுபவிப்பது – ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளுக்கு அடுத்தபடியாக – முஸ்லிம்களே! இளவயதில் கைதாகி ஒட்டுமொத்த இளமையையும் வாழ்வையும் தொலைத்தவர்களாக அல்லலுறுகின்றனர். பிணையில்கூட வெளிவராமல் அவர்கள் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டுச் செத்துமடியும் கொடுமையும் நிகழ்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்

Loading

‘அறிவுத்தோற்றவியல் காலனியம்’தான் (Epistemological colonization) உண்மையில் காலனியத்தின் மூலவேர் என பேராசிரியர் ரமோன் எழுதிச் செல்கிறார். அதாவது, உலகின் பிரச்சினை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, உலகிற்குத் தேவையான கோட்பாடுகள் என்ன, அரசியல் பொருளதார சமூகவியல் கருத்தாடல்களுக்களுக்கான வரையறைகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன முதலிய மிக முக்கியமான கேள்விகளுக்கான பதிலை ஐரோப்பாவே வடிவமைத்து வருகிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் இஸ்லாமிசமும் ஜனநாயகமும்

Loading

குஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் தடைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மைகளோடான புறக்கணிப்புவாத கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது. 

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வதை முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள்

Loading

சீனாவின் கிழக்குப் பிராந்தியமான சிங்ஜியாங் மாநிலத்தில் வாழும் உய்குர் முஸ்லிம்கள் திரைமறைவில் ஒரு கலாச்சாரக் கூட்டுப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று மனித உரிமைகளைக் கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு (Human Rights Watch) வெளியிட்ட நீண்ட அறிக்கை உலகை ஒருகனம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், சமீபகாலமாக உய்குர் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முன்வைக்கிறது இந்தக் கட்டுரை.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் 

“பௌத்தத்திற்கு மாறுவதில் அர்த்தமில்லை” – அம்பேத்கர்

Loading

“(தலித்துகள்) பெளத்தராகவோ ஆர்ய சமாஜியாகவோ மாறுவதால் உயர் வர்ணத்தைச் சேர்ந்தோர் எனத் தம்மை அழைத்துக்கொள்வோர் (தலித்துகள்மீது) கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. எனவே, அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. போர்க்குணமிக்க ஒரு சமுதாயத்தின் ஆதரவுடன் இந்துக்களின் தப்பபிப்பிராயங்களை வெற்றிகரமாக எதிர்க்க நாம் விரும்புவதாக இருந்தால், நாம் கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாத்திற்கோதான் மாறவேண்டும். அப்போது மட்டுமே தலித்துகள்மீது படிந்துள்ள தீண்டாமைக் கறை துடைத்தெறியப்படும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சவூதி அரசு மக்காவை துஷ்பிரயோகம் செய்கிறது

Loading

ஜமால் கஷோக்ஜியின் கொலைக்குப் பிறகு, சவூதியின் முடியாட்சி ராஜ்யம் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் என்ற புனிதப் பள்ளிவாசலின் பிரசங்க மேடையை அங்குள்ள இமாம்கள் மூலம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆட்சியாளர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் போற்றிப் புகழ்ந்து நியாயப்படுத்தவும், புனிதப்படுத்தவும் முனைந்துள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

திராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள் – நிகழ்ச்சித் தொகுப்புரை

Loading

நாடெங்கும் வளர்ந்துவரும் இந்துத்துவப் பேயைத் தடுக்கும் வழி தெரியாமல் மற்ற மாநிலங்களெல்லாம் திகைத்து நிற்க, இந்துத்துவத்தையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவையும் கேலிக்குரியவையாக ஆக்கி விரட்டியடிக்கும் ஒரு பொது மனப்பான்மை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு, இங்கு செல்வாக்குடன் திகழும் ‘திராவிட / தமிழ்க் கருத்தியலே’ முக்கியக் காரணம் என்ற கூற்றுடன் வெகுசிலரே முரண்படுவர். அக்கருத்தியலின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் 1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டு, ‘பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை’ (non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டு நூறாண்டுகள் கடந்த நிலையில்; திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட திமுக 1967ல் முதன்முறையாக தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றி ஐம்பதாண்டுகள் கடந்த நிலையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கு பல வகையிலும் முக்கியமானது, பயன் மிகுந்தது.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் 

செக்குலர் இந்தியாவில் முஸ்லிம்கள்

Loading

தனிக்கட்சியாக அதிகாரம் செலுத்துவதை விட்டும் காங்கிரஸ் சரிந்ததிலிருந்து, இந்தியாவில் கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. அரசியலமைப்பு வழியாக முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தால், இந்தியக் கூட்டணி ஆட்சிச் சூழலில் அவர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை ஆகியிருக்கும். இது போதாதென்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், தேர்தல்களில் கணிசமான தாக்கம் ஏற்படுத்தக் கூடியளவு முஸ்லிம்கள் செறிந்து வாழும் தொகுதிகளெல்லாம் பெரும்பாலும் பிற சாதியினருக்கு ஒதுக்கப்பட்டன. மேற்சொன்ன வகைகளில், இந்திய மதச்சார்பின்மை என்பது வேறொரு பெயரிலான இந்து நம்பிக்கைவாதம் (confessionalism) தான்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

திராவிட சாஹிப்களும் பிராமண மௌலானாக்களும்

Loading

இந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க