கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நாய்களுக்கு கிடைக்கும் நீதி, செயற்பாட்டாளர்களுக்கு இல்லை!

Loading

2020 டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் ஒன்பது பேரின் ஜாமீன் மனுக்களை செப்டம்பர் 2ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, அந்த உள்ளார்ந்த அநீதிக்கு எதிராகக் கண்டனக் குரல் எழும் என்று நினைத்தேன். ஆகஸ்ட் 11ஆம் தேதி டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களின் மாநகராட்சி அதிகாரிகள், தங்கள் பகுதிகளில் இருந்து தெருநாய்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மக்கள் வெளிப்படுத்திய கோபத்திலிருந்து எனக்கு இந்த நம்பிக்கை பிறந்தது. ஆனால், என் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. ‘முஸ்லிம்களை விட நாய்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது’ — கசப்பினால் மட்டும் நான் இவ்வாறு கூறவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

‘இந்துச் சமூகமே உச்சத்தில் இருக்க வேண்டும்!’
சில வேலைவாய்ப்பு வலைத்தளங்கள் மத அடிப்படையில் விண்ணப்பங்களை வடிகட்டுவது ஏன்?

Loading

இத்தகைய வேலைவாய்ப்பு வலைத்தளங்கள், வெற்றிடத்திலிருந்து தோன்றியவையல்ல. அவை, முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

‘மொஹப்பத் கா ஷர்பத்’ ஒன்றும் ‘ஷர்பத் ஜிஹாது’ இல்லை!
ரூஹ் அஃப்ஸாவை ஆயுதமாக்கும் உணவு அரசியல்

Loading

ஒரு காலத்தில் ஒற்றுமையின் சின்னமாகக் திகழ்ந்த ரூஹ் அஃப்ஸா, இன்று பிளவுபடுத்தும் வெறுப்புப் பேச்சில் பகடையாக மாறியுள்ளது. பாபா ராம்தேவ் இதனை ‘ஷர்பத் ஜிஹாது’ என்று அடையாளப்படுத்தியிருப்பது, ஒன்றிணைக்க வேண்டிய உணவு எவ்வாறு அரசியல் ஆதாயங்களுக்காக ஆயுதமாக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. நாம் பகிர்ந்து உண்ட நமது உணவு மேசைகள், இதுபோன்ற பிளவுகளிலிருந்து என்றேனும் விடுபடுமா என்று வினவுகிறார் ஸதஃப் உசைன்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தூஃபானுல் அக்ஸா: இழப்புகளுக்கு அப்பால்…

Loading

காஸாவின் இழப்புகளுக்கு ஈடாக எதுவும் இருக்க முடியாது என்றாலும், ஸியோனிஸ்டுகளின் இனப்படுகொலை முயற்சிகள் எதிர்ப்புப் போராட்ட அமைப்புகளையோ, அவற்றின் திறனையோ, போர் புரியும் மன உறுதியையோ பாதிக்கவில்லை. இராணுவ நடவடிக்கையின் மூலம் காஸாவை ஒருபோதும் பணியவைக்க முடியாது. தலைவர்கள் என்றோ, வீரர்கள் என்றோ வேறுபாடின்றி, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முடித்துச்செல்கிறவர்களின் பொறுப்புகளை உடனடியாக ஏற்கக்கூடிய ஒரு நீண்ட வரிசையும், குறைபாடற்ற செயற்பாட்டு அமைப்பும் அங்கு இருக்கிறது.

மேலும் படிக்க
Kashmir Muslim Women கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய முஸ்லிம்கள் ஏன் தங்கள் விசுவாசத்தை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும்?

Loading

மதத்தின் அடிப்படையில் விசுவாசப் பரிசோதனைகளைக் கோரும் ஒரு ஜனநாயகம், உண்மையான ஜனநாயகமே அல்ல. அது விலக்கிவைக்கும் தன்மையும், பெரும்பான்மைவாதப் போக்கும் கொண்ட ஜனநாயக விரோத அரசாகும். இந்நிலை மாறாத வரையில், இந்திய முஸ்லிம்கள் தாங்கள் தொடங்காத போர்களுக்காகத் தம் உயிர், பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றை விலையாகக் கொடுக்கும் நிலை தொடரவே செய்யும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பயத்தால் மௌனிக்கப்பட்டவர்கள்
இந்தியாவில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் நெருக்கடி

Loading

இந்திய முஸ்லிம்கள் தங்களுக்கான சொந்தக் குரலைக் கொண்டிருப்பதற்குப் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. உலக அளவிலும் இதே நிலைதான். உதாரணமாக, தேசியவாதத்தை எதிர்த்து ஒரு முஸ்லிம் கருத்து தெரிவித்தால், அவன் தீவிரவாதி அல்லது பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்படுகிறான். இதுபோன்ற முத்திரைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக, முஸ்லிம் அல்லாதவர்களை மேற்கோள் காட்டியே தங்கள் கருத்துகளை நியாயப்படுத்தும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த வகையில், கூட்டணிகளை அமைத்தே தீர வேண்டுமென அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய முஸ்லிம்கள் ஜனநாயகத்தில் பங்காளிகள்; ராஜதந்திரத்தில் பகடைகள் அல்ல!

Loading

இந்திய அரசியலுக்கு மட்டுமே உரித்தான விசித்திரமான முரண்பாடாக, உள்நாட்டில் முஸ்லிம்களைப் புறக்கணிக்கும் ஓர் அரசாங்கம், அண்மையில் பஹல்காமில் நிகழ்ந்த கொடிய தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கினை ‘வெளிக்கொணர்வதற்காக’ முஸ்லிம் முகங்கள் முதன்மையாக இடம்பெற்றுள்ள 48 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பரந்த, பலகட்சிப் பிரதிநிதிகள் குழுவை தற்போது ஒருங்கிணைத்துவருகிறது.
முஸ்லிம்கள் அந்தக் குழுவில் அங்கம் வகிப்பது பிரச்சினையல்ல. மாறாக, இதன் பின்னணியில் உள்ள பாசாங்குத்தனமான அடையாள அரசியலே சிக்கலானது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தனிமையில் என் புத்தகங்களுடன்…
சிறையிலிருந்து ஷர்ஜீல் இமாம்

Loading

எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரத்யேக நேர்காணலில், திகார் மத்திய சிறையில் இருக்கும் 37 வயதான ஷர்ஜீல் இமாம் தனது சிறைவாசம், வாசிக்கும் புத்தகங்கள், சக கைதிகள், தனது பூனை நண்பர்கள் ஆகியோர் பற்றித் தம்முடைய எண்ணங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். வெளியுலக நிகழ்வுகளுடன் இணைய விரும்பும் அவர் தனது தாயின் உடல்நிலை குறித்துக் கவலையை வெளிப்படுத்துகிறார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து வியப்பும் உற்சாகமும் அடைந்துள்ளார். தனது முனைவர் பட்டத்தை நிறைவுசெய்ய முடியுமென்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய ஜனநாயகத்தின் உண்மைக் கதை

Loading

‘உலகின் மிகப்பெரும் ஜனநாயகம்’, ‘ஜனநாயகத்தின் தாய்’ போன்ற உயர்வு நவிற்சியுடன் கூடிய ஒப்பீடுகள் இந்தியா குறித்த உண்மையைக் கூறுகின்றனவா? உண்மையில் இல்லை. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், சாதாரணக் குடிமக்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிகப்படியான அச்சம் நிலவுகிறது என்பதே கள யதார்த்தமாகும். நடப்புநிலையைக் கேள்விகேட்கும் எவரும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

காஸாவின் மருத்துவமனைகளில்…

Loading

ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நோயாளிகள் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒவ்வொரு வான்தாக்குதலும் டஜன் கணக்கான மக்களைக் காயப்படுத்தியது. ஒருநாள் தலை காயம், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு, பாதிக்கப்பட்ட நுரையீரலுடன் ஒரு கர்ப்பிணி வந்தார். அவர் மரணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அனஸ்தீசியா இல்லாதபோதும் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஐசியூ மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பிறந்த அக்குழந்தை, குழந்தைகளுக்கான ஐசியூ பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பத்து நாள்கள் போராட்டத்திற்குப் பிறகு அப்பெண்மணி மரணித்தார்

மேலும் படிக்க