குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

எண்ணெய்க்கு கிடைக்கும் மதிப்பு மனித உயிர்களுக்கு கிடைக்குமா?

Loading

இருபது ஆண்டுகளாக ஃபலஸ்தீனின் காஸா பொருளாதார தடையில் சிக்கித் தவித்தாலும் கண்டு கொள்ளாத உலக நாடுகள், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டவுடன் அவசரமாக செயலில் இறங்குகின்றன.
மனிதாபிமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் போது அமைதியும், வர்த்தகம் அச்சுறுத்தப்படும்போது அவசரமும் உடனடியாக வெளிப்படுகிறது. உலகம் தனது மனசாட்சியை சந்தையின் ஓசைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. உலக நாடுகள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது.
எந்தவொரு நாகரிகமும் அதன் கருவூலங்களின் செழிப்பையோ அல்லது எண்ணெய் வழித்தடங்களின் பாதுகாப்பையோ கொண்டு மதிப்பிடப்படாது; மாறாக, அது மனித உயிருக்கு அளித்த முக்கியத்துவத்தைக் கொண்டே மதிப்பிடப்படும் என்பதை நாடுகள் உணருமா?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீனின் குழந்தைகள்

Loading

ஃபலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலை அங்குள்ள குழந்தைகள் உடல், மன, மற்றும் உள ரீதியாக கடுமையாக பாதித்துள்ளன. தாங்கள் ஃபலஸ்தீனில் பிறந்த ஒரே காரணத்திற்காகவே படுகொலை செய்யப்படுகிறோம் என்பதை உறுதியாக நம்பும் அந்த குழந்தைகள் சர்வதேச சமூகம் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எத்தனை பிரச்சகைள் வந்தாலும் அது எந்த ரூபத்தில் வந்தாலும் அவை அனைத்தையும் கடந்து ஃபலஸ்தீன மக்கள் உறுதியாக உள்ளார்கள் என்று அவர்களை புகழ்வது சர்வதேச சமூகத்தின் வழமையாக மாறியுள்ளது. ஆனால், இந்த புகழ்ச்சிக்கு பின்னால் நமது கையாளாகாத தன்மையும் மறைந்துள்ளதை வசதியாக மறந்து விடுகிறோம்.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

காஸாவின் மருத்துவமனைகளில்…

Loading

ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நோயாளிகள் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒவ்வொரு வான்தாக்குதலும் டஜன் கணக்கான மக்களைக் காயப்படுத்தியது. ஒருநாள் தலை காயம், இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு, பாதிக்கப்பட்ட நுரையீரலுடன் ஒரு கர்ப்பிணி வந்தார். அவர் மரணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அனஸ்தீசியா இல்லாதபோதும் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஐசியூ மருத்துவர்கள் முடிவெடுத்தனர். பிறந்த அக்குழந்தை, குழந்தைகளுக்கான ஐசியூ பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பத்து நாள்கள் போராட்டத்திற்குப் பிறகு அப்பெண்மணி மரணித்தார்

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

யாத் வஷேம்: வேர்களைத் தேடி…

Loading

உலர்ந்த, வற்றிய சருகுகள்தான் நெருப்பை விழுங்குகின்றன. எல்லோரும் கூடி வாழும் ஒரு நாட்டில் ரத்தமும் சதையுமாய் ஊனும் நிணமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதத் தொகையினரை எல்லோரையும் சாட்சியாக்கிக் கொன்றொழிக்க எப்படி முடிகிறது? அதைத்தான் இந்த நாவல் கேள்விகளாக்கி, கள்ள மௌனம் சாதிக்கும் பெரும்பான்மையினரின் முகத்திற்கு நேரே நீட்டுகிறது.

மேலும் படிக்க