கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தீண்டாமையை அழித்தொழித்த சையித் ஃபழ்ல் தங்ஙள்

Loading

மாப்பிளா போராட்டத்தை மதவெறி என இந்துத்வ நாஜிகள் சாயமடிக்கின்றனர். இடது சாரியினரோ  “விவசாயக்கூலிகளின் புரட்சி” என்பதாக மட்டிறுத்துகின்றனர். ஆனால், மாப்பிளா போராட்டத்தின் களமோ மானுட கரிசனத்தின்  ஆழமும் பரப்பும் கொண்டது. இந்துத்வ நாஜிகள் அவதூறு உரைப்பதைப் போல இப்போராட்டம் இந்து x முஸ்லிம் என்ற இருமைகளுக்கிடையிலான முரணாக நடந்திடவில்லை. இப்போராட்டங்கள் அவற்றின் இலக்கைப் போலவே, ஆதரவும் எதிர்ப்பும் கூடிய பல முனைகளைக் கொண்டவை என்பதை தனது உழைப்பினால் நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர் முஹம்மது அப்துல் சத்தார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி

Loading

பாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் 

“நான் இந்து இல்ல, நான் இப்ப பள்ளனும் இல்ல; சாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்!”

Loading

“மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்தவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது. மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம். ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மத மாற்றம் மட்டுமல்ல. உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்

Loading

இன்று சமூக வெளிகளில் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரச்னை சந்தையூர்தான். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அளவில் பேசப்பட்ட உத்தபுரம் மாதிரி இது நாடு முழுக்கக் கொண்டு போகப்படவில்லை. பிரகாஷ் காரத்தும் இங்கு வரவில்லை. எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் தலையிடுவதில் ஒரு தயக்கம். ஏனெனில் இங்கே தீண்டாமைச் சுவரை எழுப்பியவர்களாகக் குற்றம் சாட்டப் படுகிறவர்கள் ஆதிக்க சாதியினர் அல்ல. அவர்களும் தமிழகமெங்கும் தீண்டாமைக்கு உட்படுத்தபடும் ஒரு சாதியினரே. ஆம்,பிரச்னை இங்கே இரண்டு பட்டியல் சாதியினர்களுக்கு இடையில். தீண்டாமைச் சுவரை எழுப்பித் தாங்கள் தடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுபவர்கள் அருந்ததியர். இல்லை இல்லை அது தீண்டாமைச் சுவரே இல்லை என மறுப்பவர்கள் இன்னொரு தலித் சாதியினரான பறையர்கள். இதனால்தான் பிரகாஷ் காரத் உள்ளிட்ட எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் தலையிடத் தயக்கம். வழக்கமாக இம்மாதிரிப் பிரச்னைகளில் தலையிடக் கூடியவர்கள் வாய் மூடி மௌனம் காக்க வேண்டிய சூழல். இரு சாராருமே ஒடுக்கப்பட்ட சாதியினர் என்பதற்காக ஆகக் கீழாக ஒடுக்கப்படும் ஒரு சாதியினர் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பேசாதிருப்பது என்ன நியாயம் என்கிற ஒரு தார்மீகக் கேள்வியும் இங்கே எழுகிறது. இந்நிலையில்தான் சந்தையூரில் என்னதான் நடக்கிறது எனப் பார்த்து வரலாம் எனச் சென்ற வாரம் அங்கு சென்றிருந்தேன்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்!

Loading

எது புரட்சி? மாற்றத்தைத் தருவது தானே புரட்சி? தீண்டப்படாத மக்களைப் பொருத்தமட்டில், தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுள்களைத் தூக்கி எறிவதே புரட்சியன்றி, வேறொன்றும் புரட்சி ஆகாது. ஆகவே கடவுளை மாற்றுவோம். கடவுளை மாற்றுவோம் எனக் கூறி முடிக்கிறேன்.

மேலும் படிக்க