Uncategorized 

தசவ்வுஃப்பின் தோற்றமும் வளர்ச்சியும்

Loading

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த ஹதீஸ், தப்ஸீர், பிக்ஹ், இல்முல் கலாம் போல இஸ்லாத்தின் நிழலில் உருவாகியதே தசவ்வுஃப் கலை. அது பலராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சிலர் தசவ்வுஃப் ஒரு இஸ்லாமியக் கலை என்பதையே ஏற்க மறுத்து, இஸ்லாமிய நாகரிக வளர்ச்சியில் கிரேக்க தத்துவம், பாரசிகப் பண்பாடு ஆகியவற்றின் தாக்கம் காரணமாகத் தோன்றி வளர்ச்சியடைந்த ஒரு கலையாக இதைக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தசவ்வுஃப் தவறாகப் புரியப்படுவதற்கும், அறிமுகப்படுத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்த அம்சங்கள் பற்றி ஆராய்வது ஒரு நீண்ட விளக்கத்திற்கு நம்மை இட்டுச்செல்லும். சுருங்கக்கூறின், தசவ்வுஃப் அல்லது சூஃபி என்ற பதம் சிலபோது ‘Mysticism’ என்ற பதப் பிரயோகத்தோடு இணைத்துப் பேசப்படுதல், தசவ்வுஃபின் பெயரால் பிரபலப்படுத்தப்படும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணான கருத்துகள், சூஃபி தரீக்காக்களின் சில செயல்பாடுகள் போன்றவை தசவ்வுஃப் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு…

மேலும் படிக்க