பந்துக்கு பின்னே நகரும் அரசியல்: ஃபிஃபாவின் இரட்டை நிலைகளும் மேற்கத்திய அரசியலும்!
![]()
2026 சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்திய ஃபிஃபா அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் இந்த போட்டித் தொடரில் எழுந்தன. அத்துடன் சர்வதேச அரசியலின் பிரதிபலிப்பாகவும் இந்த போட்டிகள் இருந்தன. விளையாட்டுப் போட்டிகளில் இருக்க வேண்டிய போட்டி மனப்பான்மையை கடந்து அதனை அரசியல் பழிவாங்கும் தளமாக அமெரிக்கா பயன்படுத்தியது. இதற்கு ஃபிஃபா முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.
ஆட்டத்தின் அழகை கெடுக்கும் அமைப்புகளின் அநீதிகளையும் ஏகாதிபத்தியத்தின் போலித்தனங்களையும் உலகம் ஒருபோதும் மறக்காது என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
