நூல் அறிமுகம் 

முஸ்லிம் மக்களுக்கு அம்பத்கர் எதிரானவரா?

Loading

கல்வி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், பிழைப்புவாத தலித் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணிகள் ஆகியவற்றின் மூலம் தலித் மக்கள் மத்தியில் ஊடுருவத் தொடங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை முஸ்லிம் எதிர்ப்பாளராக அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனைகிறது. சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்து மதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்ப பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்புச் செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டுமென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

காந்தி கொலைக்கான காரணம் என்ன?

Loading

“காந்தியின் எதிரிகள் யார் என்கிற கேள்விக்கு இன்றைய இளைஞர்கள் குறிப்பாக இயக்கங்கள் சார்ந்த இளைஞர்களின் பதில்கள் பல உண்மைகளைக் கணக்கில் கொள்ளப்படாமல் சொல்லப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இவர்கள் உருவாக்கக்கூடிய பட்டியலில் அம்பேத்கர், பெரியார் போன்ற சாதி எதிர்ப்பு போராளிகள், கம்யூனிஸ்டுகள், பிரிட்டிஷ் ஆட்சி என்கிற வரிசையின் இறுதியாகவே இந்துத்துவவாதிகள் அமைவர். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. வரிசையைத் தலைகீழாக மாற்றிப்போட்டாக வேண்டும். இந்துத்துவவாதிகள் என்கிற சற்றே அகன்ற அரசியல் அடையாளத்தைக் காட்டிலும் வருணாசிரமிகள், பார்ப்பனர்கள் என்றே காந்தி எதிர்ப்பாளர்களின் பட்டியல் தொடங்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்டுகள் எல்லாம் காந்தி எதிர்ப்பாளர்களே ஒழிய, காந்தியைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடுமையாக விமர்சித்தவர்களே ஒழிய காந்தியின் எதிரிகள் அல்லர்.”

– அ. மார்க்ஸ்

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்

Loading

பக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பதாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.

மேலும் படிக்க
seermai uvais ahamed நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

வஹ்ஹாபியம்: ஒரு விமர்சன ஆய்வு (நூல் அறிமுகம்)

Loading

வஹ்ஹாபியம் என்றால் என்ன? அதன் நிறுவனரின் புலமைத்துவ தகுதி என்ன? வஹ்ஹாபியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? வஹ்ஹாபிய சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சவூதி அரேபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்ன? அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்ன? தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹ்ஹாபியம் எப்படி மதிப்பிடுகிறது? வஹ்ஹாபியமும் சலஃபிசமும் ஒன்றா? அவற்றுக்கு இடையிலான பொது மற்றும் வேறுபட்ட பண்புகள் யாவை? மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹ்ஹாபியத்தை எவ்வாறு பார்த்தார்கள்? வஹ்ஹாபியத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார்? ‘தொழில்முறை வஹ்ஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன? என்பவை போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றி இரத்தின சுருக்கமாகவும் கூர்மையாகவும் இந்நூல் பேசுகிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் மொழிபெயர்ப்பு 

மனிதனும் இஸ்லாமும்

Loading

இச்சுருக்கமான ஏழு உரைகளின் வழியாக ஷரீஅத்தி இஸ்லாமிய சித்தாந்தம், அதன் உலகநோக்கு, மனிதனின் சிறைகள், ஒரு புதிய சமூகத்தை நிர்மாணிப்பதில் சுதந்திர சிந்தனையாளரின் பொறுப்பு ஆகியன பற்றி அறிவொளியூட்டும் மனச்சித்திரமொன்றை உருவாக்கியிருக்கிறார்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் மொழிபெயர்ப்பு 

பற்றியெரியும் பாலைவனம்

Loading

‘பற்றியெரியும் பாலைவனம்’ – இது வழமையானதொரு சாகசப் பயண நூல் இல்லை. இந்நூலை வாசிக்கையில் எனது இதயத்திற்குள் மனதிற்குள் சத்தியம், வீரம், ஆண்மை ஆகிய உணர்வுகள் உக்கிரமாக ஊடுருவிப் பாய்ந்ததாக உணர்ந்தேன். இந்நூலை வாசித்த நானறிந்த பலரும் இதே விதமான கிளர்ச்சியூட்டும் உணர்வை அனுபவித்ததாகச் சொன்னார்கள். வாசிக்க வாசிக்க அவரை மென்மேலும் நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஒவ்வொரு புதிய பக்கத்தை திருப்புவதற்கு முன்னும் இவ்வுணர்வு அதிகரித்துச் செல்வதை உணர்வீர்கள்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சூஃபியிசம் என்றால் என்ன?

Loading

சூஃபிகள் எதை நம்புகின்றனர்? எதை அடைய முயலுகின்றனர்? என்ன செய்கின்றனர்? இதைப் பற்றிப் பேசும் பிற எழுத்தாளர்கள் போலன்றி, மார்டின் லிங்ஸ் இம்மூன்று கேள்விகளுக்கும் சமநீதியுடன் பதிலளிக்கிறார். எனவே, ‘சூஃபியிசம் என்றால் என்ன?’ என்ற முதன்மைக் கேள்விக்கு அவரால் மிக வளமாக பதிலளிக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கோணத்திலிருந்து வருகின்றன என்றபோதும், அவை அனைத்தும் விவகாரத்தின் வேர் நோக்கியே செல்கின்றன.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்

Loading

முஸ்லிம் சமூகத்தை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்குவதற்கான முயற்சி இது என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட இம்முஜாஹிதுகள், வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று அறிந்த நிலையிலும் வீரஞ்செறிந்த இப்போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தமது தனிமனித, சமூக வாழ்வின் சகல அம்சங்களையும் தீர்மானிப்பதாக சத்திய தீனுல் இஸ்லாமே இருக்க வேண்டுமென்கிற அவர்களின் நெஞ்சார்ந்த உணர்வுதான் இப்போராட்டங்களின் அடிநாதமாக இருந்தது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

சஈத் நூர்ஸியும் ரிஸாலா-யே நூரும்

Loading

குர்ஆனிய உலகநோக்கை உட்கிரகித்து, இஸ்லாத்தின் புரட்சிகர இயல்பில் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டு, எதை நிர்மூலமாக்கி எதை நிர்மாணிக்க முனைகிறோம் என்பது பற்றிய பூரண பிரக்ஞை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குப் பொருத்தமானவொரு கல்விமுறையே உண்மையில் இன்று தேவையாக இருக்கிறது. அத்தகைய ஒன்றையே சஈத் நூர்சி தனது ‘ரிஸாலா-யே நூரில்’ முன்வைக்கிறார்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் 

மதம் vs மதம்

Loading

வரலாற்றின் துவக்கத்திலிருந்தே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கு இடையில் ஓயாமல் நடந்துவரும் போராட்டத்தினை சமயவாதிகள் மதத்திற்கும் இறைமறுப்புக்கும் நடக்கும் ஒரு போராட்டமாக விளங்கி வைத்திருக்கின்றனர். மதத்தை நிராகரிக்கும் நாத்திகர்களோ, ‘மதம்’ என்பதே வெகுமக்களை மயக்கத்தில் ஆழ்த்திச் சுரண்டுவதற்காக மனிதகுல எதிரிகள் புனைந்துருவாக்கியவோர் ஒடுக்குமுறைக் கருவி என முற்றிலும் எதிர்மறையான தீர்மானத்தைக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க