தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 1)

மனிதனே, உனது துவக்க நிலைக்கு திரும்பு. ஹஜ்ஜுக்கு செல். மிகச் சிறந்த படைப்பாக உன்னை படைத்த உனது மிகச் சிறந்த நண்பனை போய் பார். அவன் உனக்காக காத்திருக்கிறான். அதிகார மாளிகைகளை, செல்வப் புதையல்களை, தவறான வழியில் இட்டுச் செல்லும் ஆலயங்களை விட்டு நீங்கு. ஓநாயை மேய்ப்பவனாக கொண்ட மந்தையிலிருந்து நீ விலகு. அல்லாஹ்வின் இல்லத்தை (பைத்துல்லாஹ்) அல்லது மக்களின் இல்லத்தை (பைத்துந்நாஸ்) தரிசிப்பதற்காக செல்லும் கூட்டத்துடன் ‘மீக்காத்தில்’ சேர்ந்து கொள்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அறிமுகம்

“நான் சின்னஞ்சிறியவனாகவும் ஹஜ் பிரம்மாண்டம் கொண்ட ஒன்றாகவும் இருக்க, ஹஜ்ஜிலிருந்து தனிப்பட்ட முறையில் நான் கற்றுக் கொண்டதென்ன? இந்த அனுபவத்தால் எவ்வளவு தூரம் நோக்க முடிகிறது? தொடர்ந்துவரும் பக்கங்கள் இக்கேள்விகளுக்கு விடைகாண நான் மேற்கொண்ட எளிய முயற்சிகளின் விளைவாகும். எனது நோக்கம் ஹஜ்ஜின் போது என்ன செய்ய வேண்டுமென வாசகனுக்கு அறிவிப்பதல்ல. கிரியைகளின் வழிமுறைகள் (மனாசிக்) பற்றிய நூலை படிப்பதன் மூலம் இவ்வறிவைப் பெறலாம். அதற்குப் பதிலாக ஹஜ்ஜின் மெய்ப்பொருள் பற்றிய எனது கண்ணோட்டத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஹஜ்ஜை நிறைவேற்றுவது முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது ஏன் என்பதை புரிந்து கொள்வதற்கு இக்கருத்துகள் உதவ வேண்டும். அல்லது குறைந்த பட்சம், ஹஜ்ஜை பற்றி சிந்திக்கவாவது இவை உங்களைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.” – அலீ ஷரீஅத்தி

மேலும் படிக்க
seermai uvais ahamed நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

வஹ்ஹாபியம்: ஒரு விமர்சன ஆய்வு (நூல் அறிமுகம்)

வஹ்ஹாபியம் என்றால் என்ன? அதன் நிறுவனரின் புலமைத்துவ தகுதி என்ன? வஹ்ஹாபியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? வஹ்ஹாபிய சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சவூதி அரேபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்ன? அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்ன? தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹ்ஹாபியம் எப்படி மதிப்பிடுகிறது? வஹ்ஹாபியமும் சலஃபிசமும் ஒன்றா? அவற்றுக்கு இடையிலான பொது மற்றும் வேறுபட்ட பண்புகள் யாவை? மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹ்ஹாபியத்தை எவ்வாறு பார்த்தார்கள்? வஹ்ஹாபியத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார்? ‘தொழில்முறை வஹ்ஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன? என்பவை போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றி இரத்தின சுருக்கமாகவும் கூர்மையாகவும் இந்நூல் பேசுகிறது.

மேலும் படிக்க