கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கமால் மௌலா: கோயிலாக மாற்றப்பட்ட பள்ளிவாசல்!

Loading

மத்திய பிரதேசத்தில் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கமால் மௌலா பள்ளிவாசல், உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் தெளிவான வழிகாட்டல்கள் உள்ள போதும், பள்ளிவாசல்களுக்கான உரிமை கோரல்களை இந்து வலதுசாரிகள் தொடர்ந்து முன்வைக்கின்றனர். நீதிமன்றங்களும் அவற்றை அனுமதிக்கின்றன.

‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம் முறையாக பின்பற்றப்படும்’ என்று பாபரி பள்ளிவாசல் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியதை மிகப்பெரும் கேடயமாக நம்பியிருக்கும் முஸ்லிம்களுக்கு இத்தகைய தீர்ப்புகள் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

நீதியை நிலைநாட்டி, முஸ்லிம்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் நீதித்துறைக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா?

Loading

உண்மையில், அமைதியும் நீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நீதி இல்லாத இடத்தில் உண்மையான அமைதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது மயான அமைதியாக, திணிக்கப்பட்ட அமைதியாகத்தான் இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு போராடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால், மௌலானா அவர்கள் இதை மறுக்கிறார். அவரது பிரதிகளை வாசிக்கும்போது, போராட்டம் என்பதையே ஒரு வன்முறை என்கிற ரீதியில்தான் அவர் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்

Loading

பக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பதாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.

மேலும் படிக்க