கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ரூமியை இஸ்லாம்நீக்கம் செய்வதன் பின்னுள்ள அரசியல்

Loading

“மொழி என்பது வெறும் தொடர்புறுத்தலுக்கான ஊடகம் மட்டுமல்ல, அது நினைவின், பாரம்பரியத்தின், கலாச்சார முதுசத்தின் சேமிப்புக் களன்” என்கிறார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆன சினான் அண்ட்டூன் (Sinan Antoon). இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக இருப்பதனால், மொழிபெயர்ப்பாளர்கள் மேற்கொள்வது ஒரு அரசியல் வேலைத்திட்டம் (Political project) ஆகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு கவிஞர் தற்கால அமெரிக்க வாசகருக்கு புரியும் வண்ணம் அவர்கள் தான் ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் மூலப்பிரதிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதன்மூலம், ரூமியின் விஷயத்தில், ஒரு ஷரியாத் துறை பேராசிரியரும் கூட உலகம் முழுக்க விரும்பி படிக்கப்படும் காதல் கவிதைகளை எழுத முடியும் என்று வாசிப்பவர்களால் அங்கீகரிக்க முடியும்.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

அல்பகறா (பசுமாடு) அத்தியாயம் – முன்னுரை (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

அன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்கொண்ட அந்த சூழல்களைத்தான் பொதுவாக எல்லா இடங்களிலும் காலகட்டங்களிலும் – சிறிது மாற்றத்துடன் – முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதே வகையான நண்பர்கள், அதே வகையான எதிரிகள். இதுதான் குர்ஆனின் போதனைகளை இஸ்லாமிய அழைப்பின் நிரந்தர சட்டமாக ஆக்கி விடுகிறது. அதன் வசனங்களில் ஒவ்வொரு காலகட்டத்தையும் நிலையையும் எதிர்கொள்ள புத்தம் புதிய வழிமுறைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. சிரமங்கள்மிகுந்த தம் நீண்ட பாதையில் முஸ்லிம் சமூகம் அந்த வசனங்களைக் கொண்டு வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாதையில் வரக்கூடிய தடைகள் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டதாக ஆனால் ஒத்த இயல்பினைக் கொண்டவையாக இருக்கின்றன. குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் இந்த தனித்தன்மை வெளிப்படுகிறது. இது அதன் அற்புதங்களில் ஒன்றாகும்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அல்பாத்திஹா: ஆரம்பம் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

Loading

அல்லாஹ்வைக்குறித்து, அவனது பண்புகள் குறித்து, அவன் படைப்புகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து சரியான கண்ணோட்டத்தை நிலைநிறுத்துவதற்கு இஸ்லாம் மேற்கொண்ட நீண்ட நெடிய முயற்சியை திரும்பிப் பார்ப்பவர் – குர்ஆனின் வசனங்கள் இந்த முயற்சியை படம்பிடித்துக் காட்டுகின்றன – மனித சமூகத்தில் மண்டிக்கிடந்த தவறான கொள்கைகள், தீய கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் குவியல்களை அறியாமல் இஸ்லாம் மேற்கொண்ட இந்த நீண்ட நெடிய முயற்சியின் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியாது. அந்தக் குவியல்களை ஆராய்ந்து பார்ப்பது இந்த முயற்சியின் அவசியத்தைத் தெளிவுபடுத்தும். மனிதனின் மனதை இத்தகைய பல்வேறு வகையான கடவுள்கள், கண்ணோட்டங்கள், யூகங்கள், புராணங்கள் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு இஸ்லாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதும் தெளிவாகும்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

திருக்குர்ஆனின் நிழலில் – முன்னுரை

Loading

திருக்குர்ஆன் ஓர் நித்தியத்துவப் பிரதி. அருளப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை எண்ணிலடங்கா விரிவுரைகள் அதற்கு. உலகம் சுழன்று கொண்டிருக்கும் வரை அவை தொடர்ந்த படியேதான் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில். அற்புதமான தரிசனங்களை தந்தபடியே இருக்கும். மனிதன் தனது சிந்தனை என்ற பிஞ்சுக் கைகளால் இறைஞானப் பெருங்கடலை அள்ளிப்பருகி விடுவதற்கான அசாத்திய முயற்சி. இலக்குகளை அடையுந்தோறும் நீண்டுகொண்டே செல்லும் முடிவுறாப் பயணம். அத்தகைய திருக்குர்ஆன் வியாக்கியான மரபில் சையித் குதுபின் ‘திருக்குர்ஆனின் நிழலில்’-க்கு மறுக்கமுடியாத ஓர் இடம் எப்போதும் உண்டு. முன்முடிவுகளின்றி காலியான திறந்த மனத்தோடு திருக்குர்ஆனுடன் உரையாடி, உறவாடி அவர் தன் நெஞ்சத்தில் நிரப்பிக் கொண்ட ஒளியை ஏனைய மனிதர்களோடு பகிர்ந்துகொள்ள எடுக்கப்பட்ட பிரயத்தனத்தில் உதித்த இந்த தஃப்சீரை அழகுற தமிழுக்கு பெயர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம், வல்ல இறைவனின் உதவியை மட்டுமே நம்பி….

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 2) – சையித் குதுப்

Loading

மனிதச் சிந்தனை இந்தக் கண்ணோட்டத்தை உருவாக்காவிட்டாலும் அது மனிதனின் செயல்படும் தளத்திற்கு எதிரானதல்ல. அதனைப் பெற்று அதனடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே மனிதனின் பணி. நாம் ஏற்கனவே முன்னுரையில் குறிப்பிட்டவாறு இதனை தீர்மானிக்கப்பட்ட வேறு வகையான மதிப்பீடுகளைக்கொண்டு மதிப்பிடவோ வேறொரு கண்ணோட்டத்தைக்கொண்டு அணுகவோ முடியாது. மனிதன் தனக்குத் தேவையான மதிப்பீடுகளையும் அளவுகோல்களையும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டே அவன் தன்னைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையான விசயங்களை அவன் இறைவேதத்திலிருந்தே பெற வேண்டும். வேறு எந்த ஒன்றிலிருந்தும் அவற்றைப் பெறக்கூடாது. இது ஒன்றே அவனது நிகழ்கால வாழ்க்கையில் அவன் காணும் சிந்தனைகள், கண்ணோட்டங்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கான அளவுகோல். இதன்மூலம் அவன் சரியானதையும் தவறானதையும் அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 1) – சையித் குதுப்

Loading

அது அனைத்தையும் உள்ளடக்கிய சமநிலையான கண்ணோட்டம். அது முதலில் மனிதனின் எல்லாப் பகுதிகளையும் கவனத்தில் கொள்கிறது. பின்னர் அவற்றுக்கிடையே சமநிலையையும் ஒத்திசைவையும் ஏற்படுத்துகிறது. அது மனித சமூகத்தின் எல்லா காலகட்டங்களையும் கவனத்தில்கொண்டு அவையனைத்திற்குமிடையே சமநிலையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அதனை உருவாக்கியவன்தான் மனிதனையும் உருவாக்கியவன். தான் உருவாக்கியதைப்பற்றி அவன் நன்கறிவான். இந்த மனித சமூகத்தைக்குறித்து, இதனைச் சூழவுள்ள சூழல்களைக்குறித்து அவனுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. அப்படிப்பட்டவன்தான் அதன் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய, அதன் எல்லா காலகட்டங்களுக்கும் பொருந்தக்கூடிய, சமநிலையான சரியானதொரு கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்காக உருவாக்கித் தந்துள்ளான்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 1)

Loading

மனிதனே, உனது துவக்க நிலைக்கு திரும்பு. ஹஜ்ஜுக்கு செல். மிகச் சிறந்த படைப்பாக உன்னை படைத்த உனது மிகச் சிறந்த நண்பனை போய் பார். அவன் உனக்காக காத்திருக்கிறான். அதிகார மாளிகைகளை, செல்வப் புதையல்களை, தவறான வழியில் இட்டுச் செல்லும் ஆலயங்களை விட்டு நீங்கு. ஓநாயை மேய்ப்பவனாக கொண்ட மந்தையிலிருந்து நீ விலகு. அல்லாஹ்வின் இல்லத்தை (பைத்துல்லாஹ்) அல்லது மக்களின் இல்லத்தை (பைத்துந்நாஸ்) தரிசிப்பதற்காக செல்லும் கூட்டத்துடன் ‘மீக்காத்தில்’ சேர்ந்து கொள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கறுப்புப் பணமும் இந்தியாவின் வறுமையும் – அருண் குமார்

Loading

ஊதிய உயர்வு காரணமாக வறுமை குறைந்துவருவதாக அரசு கூறுகிறது. ஆனால் கறுப்புப் பணம் மற்றும் பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் வறுமைக்கோடும் மாறி வருகிறது. அதாவது, வறுமை குறைகிறது என்பதைவிட வறுமையை உருவாக்கும் காரணிகள்தான் மாறிக்கொண்டே வருகின்றன என்பதே சரியாகும். கறுப்புப் பணத்தை ஒழிப்பதை கொள்கை வகுப்பதில் சேர்க்காமல் இருப்பது, அதைக் கட்டுப்படுத்துவதை மேலும் சிரமம் ஆக்குகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 8) – மரியம் ஜமீலா

Loading

“ஜமாத்தும் அதன் எழுத்துப் பணிகளும், தேசிய வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நுழைந்து இஸ்லாத்தின்படி நம் வாழ்க்கையை எப்படி மறுகட்டமைப்பு செய்வது என்றும், நவீன காலத்தில் இஸ்லாத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்றும், உலகளாவிய அளவில் இஸ்லாம் எப்படி வழிகாட்டியாகத் திகழ முடியும் என்பதையும் மனமேற்கும்படியான வாதங்களுடன் எடுத்துரைத்தன. ஜமாத்தும் அதன் எழுத்துக்களும், மேற்கத்தியக் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் அதன் வாழ்க்கைத் தத்துவத்தையும், பொருள்முதல்வாதம் மற்றும் கம்யுனிசத்தையும் நுணுக்கமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, கற்றறிந்த வர்க்கத்தின் நலனுக்காக, அவற்றின் பலவீனங்களையும் பிழைகளையும், அவைகளை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் துயரமான விளைவுகளையும் மிக விரிவாக வெளிப்படுத்தின.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 3)

Loading

இஸ்லாமிய மரபைப் பொறுத்தவரை ‘மார்க்கம்’ எனும் வரையறைக்குள் வரும் விசயங்கள், நவீன மேற்குலகில் உள்ளவற்றைக் காட்டிலும் மிகவும் பரந்து விரிந்தவையாகும். அரசு, ஆட்சி, யுத்த தந்திரம் ஆகிய விசயங்களில் நபியவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றே செயல்பட்டார்கள் என்ற போதும், ஒரு ஆட்சித் தலைவர் என்ற வகையிலும் இராணுவத் தளபதி என்ற வகையிலும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை என்பதாகவே முஸ்லிம் சட்டவியலாளர்கள் கருதுகின்றனர். அறுதியில், அவருடைய தீர்மானங்கள் இறைவனால் வழிநடத்தப்பட்டவை அல்லவா?!

மேலும் படிக்க