பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு இறைவனின் இருப்பை பொய்ப்பிக்கிறதா?
சார்லஸ் டார்வின் முன்வைத்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாடானது புரட்சிகரமானது என்றும், அது இறைவனின் இருப்பை பொய்ப்பித்துவிட்டதாகவும் அதை முற்றுண்மையாய்க் கருதும் தரப்பினர் நெடுங்காலமாகச் சொல்லி வருகின்றனர். கடவுள் எனும் கற்பிதம் இனி செல்லாது என்பதாக அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டோர் அனைவரையும் எள்ளிநகையாடுகின்றனர். உண்மையில், பரிணாமவாதத்தால் இறைவனின் இருப்பை பொய்ப்பிக்க இயலாது. அதை இன்னும் உண்மைப்படுத்த வேண்டுமானால் முடியும். அதெப்படி என்கிறீர்களா?
பரிணாம வளர்ச்சி எனும் கருத்தாக்கத்தில் சிக்கல்கள் பல உண்டு. உயிர் முதலில் எப்படி தோன்றியது என்ற மிகப்பெரும் கேள்விக்குக்கூட அது பதிலளிக்கவில்லை. அதுவொரு பக்கம் இருக்கட்டும். ஒரு வாதத்திற்காக நாம் பரிணாமவாதத்தை ஏற்பதாகவே கொள்வோம். ஒரு செல் உயிர் வந்துவிட்டது. இப்போது அது இணைந்து பல செல் உயிரினமாக மாறும். பிறகு, இன்னும் சிக்கல் (Complex) நிறைந்த ஓர் உயிரினமாக மாறி மனிதனாக உருவெடுக்கிறது. இந்த மாற்றங்கள்/ நிகழ்வுகள் (Processes) அனைத்தும் இயற்கையாகவே ஒரு தானியங்கி பொறிமுறை (Automation Mechanism) போன்று நடக்கிறது. இதுதான் அந்தக் கோட்பாடு முன்வைக்கும் கருத்து.
இதையொத்த ஓர் உதாரணத்தை இங்கு பார்ப்போம். ஓர் எந்திரப் பொறியாளர் கார்களை உருவாக்குகிறார். இன்னொரு எந்திரப் பொறியாளர் நேரடியாக காரை உருவாக்கவில்லை என்றாலும், ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அந்த ரோபோ கார்களை உருவாக்குகிறது. இந்த இரு முறைமைகளிலும் காரை உருவாக்க பொறியாளர் ஒருவர் தேவைப்படுகிறார் அல்லவா? பரிணாம வளர்ச்சிக் கோட்பாடானது இரண்டாவது உதாரணத்தை ஒத்துள்ளது. அதாவது, பொறியாளர் உருவாக்கிய ரோபோ தானாகவே கார்களை உருவாக்கும் உதாரணம். இந்த வகையில் பார்க்கும்போது, இறைவன் ஒரு செல் உயிரைப் படைத்து, அதற்குத் தகுந்த சூழமைவை அமைத்து, பிறகு அதிலிருந்து அடுத்தடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்திருப்பதாய்க் கொள்ள முடியும்தானே?
இன்னும் சொல்லப்போனால், மேற்கூறிய எடுத்துக்காட்டில் ரோபோ மூலமாக கார்களை உருவாக்கும் பொறியாளரையே நாம் முன்னவரைவிடச் சிறந்த திறமைசாலி என்போம் அல்லவா? எனவே, ஒரு வாதத்திற்காக பரிணாம வளர்ச்சியை உண்மையென்று கொண்டாலும், அதன்மூலம் இறைவனை மறுக்கவோ பொய்யாக்கவோ முடியாது. மாறாக, இறைவனை மேலதிகமாக போற்றிப் புகழவே முடியும்.
[…] […]
இது மெய்ப்பொருளா பொய்ப்பொருளா?
சப்பைக்கட்டு கட்டுவது என்றால் இதுதான். எதற்கும் ஒரு நாளும் நேர்மையாக பதிலையோ,சுய விமர்சனத்தையோ ஏற்க மாட்டீர்கள் போல.
டார்வினின் கோட்பாடுகளைதாண்டி அறிவியல் உலகம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. இன்னும் நீங்கள் ஏன் டார்வினை பிடித்து தொங்கி கொண்டுள்ளீர்கள் தெரியவில்லை!??
உயிரினம் எப்படி உருவாகியது என்று தெள்ள தெளிவாக அறிவியல் மெய்பித்துள்ளது. இருந்தும் இன்னமும் ஒன்றுக்கும் உதவாத கார் தயாரிப்பு உதாரணத்தை மிகப்பெரும் தர்க்கம் என நினைத்து நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
குரான் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை யாரும் சொல்லாதது என சொல்லி இஸ்லாமியர்களை ஏமாற்றி அதற்கு ஒரு தெய்வீக அந்தஸ்த்தை கொடுத்துவைத்துள்ளீர்கள்.
ஆனால் கிபி 500 க்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு அறிவியல் கருத்துகளை அன்றைய அறிவிற்குட்பட்டு குரானில் உள்ளதை போல் முரணாக இல்லாமல் மிகச்சரியாகவே மனிதர்களே முன்வைத்துள்ளனர். யாரும் தங்களை இறைதூதர் என்று சொல்லி ஏமாற்றவில்லை.
எல்லா அறிவியல் துறையிலும் ஒரு Update இருக்கும்..ஆனால் இந்த பரிணாம வளர்ச்சியில் மட்டும் ஏன் டார்வினை தவிர வேறு யாரும் இன்று இல்லை??
இல்லையா அல்லது இன்னும் நிரூபிக்கபடவில்லையா???