கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிந்தையில் ஆயிரம் வினாக்கள் – ரமீஸ் பிலாலி

Loading

ஸூஃபி மகான்களை இஸ்லாம்-நீக்கம் செய்து காட்டுவது என்பது இஸ்லாமோ ஃபோபியாவைப் பரப்புவதன் ஓர் அங்கமாக இவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. ஸூஃபிகளின் ஞானச் செல்வங்களை முஸ்லிம்களே மறுதலிக்கும்படிச் செய்வதும் இதன் மூலம் சாத்தியமாகிறது. அதே சமயம், ஸூஃபிகள் எல்லாம் இஸ்லாத்தின் கட்டுப்பாடான சட்டங்களுக்கு எதிரானவர்கள் என்னும் பொய்ப் பிம்பத்தையும் கட்டமைத்துவிட முடிகிறது. இப்படி ஒரே கல்லில் இரண்டு அல்லது மேற்பட்ட மாங்காய்கள் விழுகின்றன.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

‘காதலின் நாற்பது விதிகள்’ நாவலின் வரலாற்றுப் பின்னணி

Loading

பதின்மூன்றாம் நூற்றாண்டு என்பது ‘அனடோலியா’வில் (துருக்கி சாம்ராஜ்யம்) மிகவும் கொந்தளிப்பான காலம். அரசியல் மோதல்களும் முடிவற்ற அதிகாரப் போட்டிகளும் மதச் சண்டைகளும் நிகழ்ந்திருந்த காலம் அது. மேற்கில், ஜெருசலேம் நோக்கிப் படையெடுத்த சிலுவைச் சேனை ‘கான்ஸ்டாண்டிநோபிள்’ என்னும் இஸ்தான்பூலைச் சூறையாடியது. அதன் விளைவாக பைஸாந்தியப் பேரரசு இரண்டாகப் பிளந்தது. கிழக்கில், செங்கிஸ் கானின் ராணுவ மேதைமையின் கீழ் கட்டுப்பாட்டுடன் முன்னேறிய மங்கோலியப் படை துரிதமாகப் பரவி வந்தது. இரண்டிற்கும் இடையில் பல்வேறு துருக்கி இனக்குழுக்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. பைஸாந்தியர்கள் தாம் இழந்த நிலம், செல்வம் மற்றும் அதிகாரத்தை மீட்கப் போராடினர். எப்போதும் இல்லாத குழப்பம் கோரத் தாண்டவம் ஆடியது. எப்பக்கம் திரும்பினாலும் அங்கே பகைமையும் வெறுப்பும் இருந்தன. மேலும், அடுத்து என்ன நிகழுமோ என்ற பேரச்சம் கண் முன் நின்றது.

மேலும் படிக்க