கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

CAA எதிர்ப்புப் போராட்டம்: அலிகர் பல்கலைக்கழகத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன?

Loading

இவ்வாண்டின் தொடக்கத்தில் அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற CAA, NRC எதிர்ப்புக் கூட்டத்தில் பேசியதற்காக JNU ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம் தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு பத்து மாதங்கள் கடந்து இன்றும் சிறையிலிருக்கிறார். அப்படி அவர் என்னதான் பேசினார் அன்று? அவருடைய முழுப் பேச்சின் தமிழாக்கம் இது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

திராவிட சாஹிப்களும் பிராமண மௌலானாக்களும்

Loading

இந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

திராவிட அரசியலும் முஸ்லிம்களும்

Loading

விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இப்புத்தகம், 1930இலிருந்து 1967வரையிலான தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியலை ஆராய்வதன் வழி, முஸ்லிம்களின் எந்தவொரு ஒற்றை அடையாளமும் அவர்களது அரசியல் பயணத்தின் பன்மயப்பட்ட வழித்தடங்களைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்காது என்று நிறுவும் செயற்பாட்டில் வெற்றியடைந்துள்ளது. இந்தப் புத்தகம் விடைகாண முயலும் மையமான வினா இதுதான்: ஏன் சமூக நல்லிணக்கம் என்ற விஷயத்தில் வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியத்தோடு சிறந்து விளங்குகிறது?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 2) – மரியம் ஜமீலா

Loading

“எனவே, என் முன் மூன்று பிரச்னைகள் இருந்தன; நாடு பிரிக்கப்படாவிட்டால் முஸ்லிம்களை பாதுகாக்க என்ன செய்வது; நாடு பிரிக்கப்பட்டால் இந்தியாவில் தங்கிவிடும் முஸ்லிம்களுக்காக என்ன செய்வது; பிந்திய நிகழ்வில், புதிய முஸ்லிம் நாடு இஸ்லாம் அல்லாத அரசாக உருவாகிவிடாமல் தடுத்து, அசல் இஸ்லாமிய அரசாக உருவாக வழி செய்வது எவ்வாறு?”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 1) – மரியம் ஜமீலா

Loading

மரியம் ஜமீலா Islam in Theory and Practice என்ற தனது நூலில் அபுல் அஃலா மௌதூதி பற்றி எழுதியுள்ள அத்தியாயத்தை இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். நீண்ட ஆக்கம் என்பதால் பகுதி பகுதியாக வெளியிடுகிறோம். அதில் முதற் பகுதி கீழே.

மேலும் படிக்க