தொடர்கள் மொழிபெயர்ப்பு 

நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 2)

Loading

மக்காவில் நபியவர்கள் முன்வைத்த தூதுத்துவ அழைப்புக்கு மறுமொழியளித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட, துயருக்குள்ளாக்கப்பட்ட அடிமைகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மத்தியில் மேல்தட்டினரின் வாரிசுகள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் கூட தங்களின் புதிய இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி அவர்களின் குடும்பத்து மூத்தவர்களால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொஞ்சமும் பலியாகிவிடவில்லை. இஸ்லாத்தையோ அல்லாஹ்வின் தூதர் மீதான விசுவாசத்தையோ கைவிடுவதைக் காட்டிலும், தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவிப்பதையே அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்களின் தூதின் உண்மைத் தன்மையையும், மக்காவின் சமூக ஒழுங்கு மிகத் தீவிரமாகப் பழுதடைந்த ஒன்று என்பதையும் அவர்கள் முற்றாக நம்பினார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

அண்ணலாரின் வாழ்வில் அதிகாரப் பரிமாணங்கள் – ஸஃபர் பங்காஷ்

Loading

இறைத்தூது வழங்கப்பட்ட தனியொரு மனிதராகத் துவங்கிய அண்ணலார் எவ்வாறு வெகு குறுகியதொரு காலத்திற்குள், அரபுகளின் சமூக அடிப்படைகளை முற்றாக மாற்றி மறுவரைவிலக்கணம் செய்து, புதியதொரு நாகரிகத்தின் தோற்றத்துக்கு வித்திட்டார்கள் என்பது நாம் ஆழ்ந்து கற்க வேண்டியதொரு அம்சமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்

Loading

“இது வெறுமனே நமது பாரம்பரியம் மட்டுமல்ல; இது இறைத்தூதரின் (ஸல்) வரலாற்றுக்கான ஆதாரம்” என்கிறார் டாக்டர் அலவீ. “இப்போது நாம் என்ன கூறுவது? ‘இந்த வாகன நிறுத்தம் தான் இஸ்லாத்தின் முதல் பள்ளிக்கூடமாக இருந்தது’; ‘இங்கு இருந்த ஒரு மலை மீது நின்றே முஹம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தினார்கள்’ என்று கூறுவதா?… வரலாற்றுக்கும் கட்டுக்கதைக்கும் இடையிலுள்ள வேறுபாடுதான் என்ன?” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் அவரே அதைக் கூறுகிறார், “ஆதாரம்! அதைத் தான் இந்த வஹாபி ஆர்வவெறியர்கள் மும்முரமாக துடைத்தழித்துக் கொண்டிருக்கின்றனர்”.

மேலும் படிக்க