குறும்பதிவுகள் 

காலனியத்தின் உண்மை முகம்

Loading

கொலம்பஸ் தலைமையிலான காலனியாதிக்கப் படை அமெரிக்கக் கண்டத்தை ஆக்கிரமித்து, அந்த மண்ணின் மக்களான செவ்விந்தியர்களைக் கொன்றொழித்ததுடன் பல்லாயிரக் கணக்கானோரைப் பிடித்து அடிமைகள் ஆக்கியது.

அதையொட்டி ஐரோப்பாவின் கிறித்தவ மதவட்டங்களில் ஒரு விவாதம் கிளம்பியது. அதாவது, செவ்விந்தியர்களுக்கு ஆன்மா உள்ளதா இல்லையா? அவர்கள் மனிதர்கள்தானா, இல்லை மிருகங்களா?

இந்த விவாதத்தின் பின்னணி என்னவென்றால், விலங்குகளைப் போல் அவர்களை அடிமைப்படுத்தி கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துவது மதக்கண்ணோட்டத்தில் பாவமா இல்லையா என்பதே அவர்களின் கவலை.

இந்த விவாதத்தில், செவ்விந்தியர்கள் மனிதர்கள் இல்லை என்று வாதித்த தரப்பு முன்வைத்த முதன்மைக் காரணங்கள் சில என்ன தெரியுமா?

“செவ்விந்தியர்கள் மத்தியில் ‘தனியுடைமை’ எனும் கருத்தாக்கமே இல்லை. கூட்டாக உற்பத்தியில் ஈடுபட்டு தங்களுக்குள் அதைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதால் ‘சந்தை’ என்ற ஒன்றும் அவர்கள் மத்தியில் இல்லை. எனவே அவர்களை மனிதர்கள் என்று ஏற்க முடியாது. மிருகங்களைப் பிடித்து, பழக்கி, தமது வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதுபோல் செவ்விந்தியர்களையும் அடிமையாக்கி, பழக்கி, கட்டாய உழைப்பில் பயன்படுத்திக் கொள்வது முற்றிலும் சரியானதே.”

மேற்கத்திய ‘நாகரிகம்’ பற்றிச் சொல்லும்போது, ‘அது நாகரிகமல்ல, நோய்’ என்று கலீம் சித்தீக்கி வருணித்தது எத்துணை துல்லியமானது!

Related posts

Leave a Comment