தேசிய உணர்வு கூடாது என நான் சொல்லவில்லை. ஆனால் தேசியத்திற்கும் பாசிசத்திற்குமான எல்லைக் கோடு துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டும். எல்லோரையும் உள்ளடக்குவது ஒன்றுதான் தேசியம் பாசிசமாக மாறாமல் இருப்பதற்கான ஒரே வழி.
இஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை. அது மானிட சமத்துவத்தை வலியுறுத்தும் உலகளாவிய மார்க்கம். நாடு, இனம், மொழி என எந்த வரையறையும் அதனைக் கட்டுப்படுத்தாது.
பத்தாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், இன்றும் பாட்லா வீதிகளில் படிந்துகிடக்கும் சாஜித், ஆதிஃப் அமீன், காவல்துறை கண்காணிப்பாளர் எம்.சி. ஷர்மா ஆகியோரின் குருதிக்கறை உண்மை மற்றும் நீதிக்கான கேள்விகளை எழுப்பிய வண்ணமிருக்கிறது. நாட்டின் தலைநகரில் வைத்து முஸ்லிம் உடல்கள் மீது நிகழ்த்தப்பட்ட இவ்வன்முறை வெறியாட்டத்தை நினைவூட்டும் நாளாகவே செப்டம்பர் 19 இந்திய அரசின் வரலாற்றில் பதிவாகும்.
காலம் என்று ஒன்று இருக்கிறதா? நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம்? இன்னும் சொல்வதென்றால், காலம் என்றால் என்ன என்பதை எப்படி வரையறுப்போம்?
அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பு எனும் பாலியல் சாய்வு பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என்றும், அதன்படியே அவர்கள் பாலுறவுச் செயல்களில் ஈடுபடலாம் என்றும் ஊக்குவிப்பது மட்டுமே அவர்கள் மீதான கரிசனை எனும் புரிதலையே நாம் இங்கு கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அவர்கள்மீது கொள்ளும் உண்மையான கரிசனை, செய்யக்கூடிய உண்மையான உதவி என்பது அவர்களிடம் இருக்கும் தன்பாலின ஈர்ப்பை எப்படி நெறிப்படுத்தலாம், சுயகட்டுப்பாடுடன் கூடிய கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ அவர்களுக்கு எப்படி உதவலாம் எனச் சிந்திப்பதிலேயே இருக்கிறது எனக் கருதுகிறோம்.
இன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மேலே விவரித்தபடியான ஒரு வரலாற்றுப் பயணத்தைக் கடந்தே நம்மிடம் வந்து சேர்ந்திருப்பதை விரிவாக அறிந்துகொள்ள டார்ஸ்டனின் ஆய்வுரை உதவியதில் மனநிறைவு.
தன்னிடம் இருப்பவற்றை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகள் என்பதை உணராதவன் அவற்றை தன் திறமையின் விளைச்சலாகக் கருதி கர்வம்கொள்வான். அவற்றைப் பெற்றிராத மற்றவர்களை இழிவாகக் கருதுவான்.
முஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாது இயக்கத்தை துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்தான் அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர்.
இஸ்லாம் மனிதனின் தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்த அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. அவனுடைய தீய உணர்வுகளுடன் போராடும்படி அவனுக்குக் கட்டளையிடுகிறது. அது மனம் எல்லா வகையான உணர்வுகளும் பொங்குமிடம்தான் என்பதையும், ஒவ்வொன்றும் எல்லை மீறவே விரும்பும் என்பதையும் அவனுக்கு உணர்த்தி, அவற்றை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பதற்கான சரியான வழிமுறைகளையும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது.
நபியவர்களின் (ஸல்) காலத்தில் சிறந்தொரு சிவில் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை விழுமியங்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், உமையாக்களின் காலப்பகுதியில் அதிகாரச் சக்திகளுக்கு எதிரான சிவில் சமூகத்தின் எதிர்ப்பரசியல் செயற்பாடுகள் துளிர்விட ஆரம்பித்தன. தொடர்ந்து, அப்பாஸிய காலப்பிரிவில் சிவில் சமூகத்தின் ஏனைய கூறுகளான தொழிற்சங்கங்களின் எழுச்சி, அறிஞர்களின் செல்வாக்கு, சமூகநலச் செயற்திட்டங்களின் மேம்பாடு போன்றவை வளர்ச்சிகண்டன. ஆனால், உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசிக் காலப்பிரிவிலும், புதிய தேசிய அரசுகளது தோற்றத்தின் பின்புலத்தில் இயங்கிய சர்வதிகார அரசியல் சக்திகளாலும் சிவில் சமூகக் கட்டமைப்புகள் காவுகொள்ளப்பட்டன.