கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் மக்கள் தொகை: பொதுப்புத்தியை அச்சுறுத்தும் கட்டுக்கதையும் நிதர்சனமும்

Loading

மக்கள் தொகை உயர்வானது எந்நேரமும் தீங்கு விளைவிப்பதாய் மட்டும் இருப்பதில்லை என்பதையும் மதத்தோடு தொடர்புடையதாகவும் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம் முஸ்லிம்கள் 9.8ஆக இருந்தார்கள். 2011 கணக்கெடுப்பின்போது 14.2 சதவீதமானார்கள். அவர்களின் வளர்ச்சி விகிதம் கடந்த சில தசாப்தங்களாக சரிந்து வருகிறது. கூடியவிரைவில் அது நிலையானதாக ஆகிவிடக்கூடும். அரசாங்கம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது பற்றியெல்லாம் கலந்துரையாடவும், அதற்காகத் திட்டம் வகுக்கவும் செய்யலாமே அன்றி, இவ்விஷயத்தை மதம் சார்ந்து அணுகக் கூடாது. வாக்காளர்களைத் துண்டாடி, அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட கட்சியை வளர்ப்பதே முஸ்லிம் மக்கள் தொகை குறித்த வெறுப்புப் பேச்சுகளின் நோக்கமாகும். காலவோட்டத்தில் இதுவே சமூகத்தில் ஆழமாகப் படிந்துவிடுகிறது. எனவே, தர்க்க ரீதியாகவும் உண்மையைக் கொண்டும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை

Loading

நியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும் இஸ்லாம்-அச்சமும், இஸ்லாம்-வெறுப்பும் பெருமளவில் பரவலாக்கப்பட்டுள்ளன. வெள்ளையினத் தேசியவாதிகளும், சுவிஷேசக் கிறிஸ்தவர்களும் (Evangelical Christians), ஸியோனிஸ்டுகளும் இதைப் பெரும் தொழிலாகவே வளர்த்தெடுத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்

Loading

இன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மேலும் படிக்க
காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி!

Loading

“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”

மேலும் படிக்க