இத்தகைய வேலைவாய்ப்பு வலைத்தளங்கள், வெற்றிடத்திலிருந்து தோன்றியவையல்ல. அவை, முஸ்லிம்களைப் பொருளாதார ரீதியில் புறக்கணிக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஒரு காலத்தில் ஒற்றுமையின் சின்னமாகக் திகழ்ந்த ரூஹ் அஃப்ஸா, இன்று பிளவுபடுத்தும் வெறுப்புப் பேச்சில் பகடையாக மாறியுள்ளது. பாபா ராம்தேவ் இதனை ‘ஷர்பத் ஜிஹாது’ என்று அடையாளப்படுத்தியிருப்பது, ஒன்றிணைக்க வேண்டிய உணவு எவ்வாறு அரசியல் ஆதாயங்களுக்காக ஆயுதமாக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. நாம் பகிர்ந்து உண்ட நமது உணவு மேசைகள், இதுபோன்ற பிளவுகளிலிருந்து என்றேனும் விடுபடுமா என்று வினவுகிறார் ஸதஃப் உசைன்.
மதத்தின் அடிப்படையில் விசுவாசப் பரிசோதனைகளைக் கோரும் ஒரு ஜனநாயகம், உண்மையான ஜனநாயகமே அல்ல. அது விலக்கிவைக்கும் தன்மையும், பெரும்பான்மைவாதப் போக்கும் கொண்ட ஜனநாயக விரோத அரசாகும். இந்நிலை மாறாத வரையில், இந்திய முஸ்லிம்கள் தாங்கள் தொடங்காத போர்களுக்காகத் தம் உயிர், பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றை விலையாகக் கொடுக்கும் நிலை தொடரவே செய்யும்.
மேற்குலகிலும் மற்ற பல நாடுகளிலும் வலதுசாரித் தீவிரவாதம்தான் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளது. அரசியல், ஊடகம் என அனைத்துத் தளங்களிலும் இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இளைஞர்களை மூளைச் சலவை செய்து வன்முறையைத் தூண்டுகின்றனர். இதற்கு எதிராக உலகம் முழுவதும் பலமான குரல் எழ வேண்டும். அந்தந்த நாடுகளில் இருக்கும் அரசுகள் வலதுசாரித் தீவிரவாதத்தை தனிக் கவனமெடுத்து முறியடிக்க வேண்டும். இனவாதத்தையும், இஸ்லாமிய வெறுப்பையும் முற்றாக வேரறுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த நாடுகள் ‘உண்மையான வளர்ச்சி’யை நோக்கிச் செல்ல முடியும்.
ஆஃபியா சித்தீக் எனும் பெண் டாக்டருக்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்றான FMC கார்ஸ்வெல் சிறையில் அவர் வாடிக்கொண்டிருக்கிறார். Prisoner 650, Grey Lady, தேசத்தின் மகள் என அவருக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. ஆஃபியாவுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் நேர்ந்த கொடூரத்தை வார்த்தைகளைக் கொண்டு நம்மால் விளக்க முடியாது. Dr.ஆஃபியா யார், அவர் எப்படி சிறை சென்றார், அவரை சிறைவைத்திருப்பது யார், என்ன காரணம் அதற்குச் சொல்லப்படுகிறது என இங்கு பார்ப்போம்.
சீதா ராமம் திரைப்படத்தில் பல காட்சிகளில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாக இடம்பெறுகிறது. அதை நைச்சியமாக முன்வைப்பதற்கெல்லாம் படக்குழுவினர் மெனக்கெடவே இல்லை. அதுபோல, தெலுங்குப் படத்துக்கே உரிய க்ரிஞ்சு அம்சங்கள் திரைப்படம் நெடுக இடம்பெறுகின்றன. ஆனால் யூடியூபில் பட விமர்சனம் தரும் பிரஷாந்த், ப்ளூ சட்டை போன்ற பலர் இதை ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.
உலகிலேயே சட்ட விதிகளை மீறி சிறுபான்மையினர் வீடுகளைத் தகர்ப்பது இரண்டே நாடுகள்தான்; ஒன்று இஸ்ரேல், மற்றொன்று இந்தியா என்கிறார்கள். ஒரு நாடாக இந்தியாவுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? இந்தியர்கள் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.
இந்து ராஷ்டிர கனவில் மிதக்கும் சங் பரிவாரம் முஸ்லிம்களை அதன் முதன்மை இலக்காக்கி தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாட்டில் மத ரீதியாக பதற்ற நிலை ஏற்பட்டால் அதை அருவடை செய்து பெரும் அரசியல் லாபமடைவது பாஜகதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்னைகள் இந்தியாவை சூழ்ந்துள்ளன. இந்திய மக்கள் வெறுப்பரசியலுக்கு இனியும் இடமளித்தால் இன்னொரு இலங்கையாக இந்தியா மாறக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.
ஹிஜாப் உங்கள் சுயதேர்வா அல்லது வீட்டிலுள்ளர்களின் அழுத்தத்தால் கடைப்பிடிக்கப்படுவதா?
இது எங்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதாக முஸ்லிமல்லாதோர் பலர் நினைக்கிறார்கள். அந்த அடிப்படையிலிருந்துதான் இந்தக் கேள்வி வருகிறது. நாங்கள் மூளை சலவை செய்யப்பட்டிருப்பதாகக்கூட ஒருசிலர் வெறுப்பைக் கக்குகிறார்கள். எங்களுக்கு சுயசிந்தனை இல்லை என்பதுபோல் அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். ஒருவகையில் இதுவெல்லாம் முஸ்லிம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை.
சுயதேர்வு பற்றி ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஒருவரின் சுயதேர்வு 100 சதவீதம் எந்தப் புற அழுத்தமும் இல்லாமல் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்ல முடியுமா? நம் சமூகத்தில் பெண்கள் முடியை நீளமாக விடுவதும், ஆண்கள் தன் முடியைக் கத்தரித்துக்கொள்வதும் அவரவர் விருப்பங்களின்படிதான் நடக்கிறதா? அவ்வாறு நடந்தால் மக்கள் எல்லோரும் எப்படி ஒன்றுபோல் இருக்க முடிகிறது?
அதனால் ஹிஜாபை திணிப்பு, அடிமைத்தனம் என்றெல்லாம் வெளியிலுள்ளோர் சொல்லக் கூடாது. அது எங்களை அவமதிக்கும் செயல். அப்படிச் சொல்வோரை சட்டப்படி தண்டிக்க வழிவகைகள் தேவை என்று நினைக்கிறேன். ஹிஜாப் குறித்து கருத்துச் சொல்லும் உரிமை மற்றவர்களைவிட எங்களுக்குத்தான் இருக்கிறது.
FIR படத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் மற்றுமொரு நச்சுக் குப்பைதான் இந்த Beast திரைப்படம். இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் கொள்கைப் பற்று மயக்கமடைய வைக்கிறது.
நாடே இந்துத் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும்போது, அதிலும் வடக்கில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டும்கூட இப்படியொரு படம் எடுக்க முடிகிறதென்றால் நெல்சன் போன்றவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது.
ஒடுக்கப்படும் தமது சமூகத்தை ஒற்றைக்கல் கட்டுமானமாகச் சித்தரிப்பதும், அதற்குள் பல போக்குகள் இருப்பதைக் காண மறுப்பதும், தம் சமூகத்தின் மீது அரசு நிறுவன ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் அளவுக்கு அவரது பகுத்தறிவு உணர்ச்சி செல்வதும் சரியானதாகத் தோன்றவில்லை. எந்தச் சமூகத்திலிருந்து வந்தாரோ, அந்தச் சமூகம் படும் பாடுகளைப் பரிவுணர்ச்சியுடன் காண அவருக்குக் கண் இல்லை. அத்துடன், பார்ப்பன ஆதிக்கத்தின் கோர வடிவான இந்து / இந்திய தேச அரசின் ஒடுக்குமுறை எதிர்த்துப் போராடும் திராவிட இயக்க உணர்ச்சியும் அவரிடமில்லை என எனக்குத் தோன்றுகிறது.
இதுபோன்ற குரல்களை பகுத்தறிவுவாதம், மத விமர்சனம் என பொத்தாம் பொதுவான போக்கில் திராவிட இயக்க மேடைகளில் அனுமதிப்பதும் நியாயமானதில்லை.