தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (3)
எல்லாச் சட்டங்களுக்கும் பின்புலத்தில் ஒரு சிந்தனைச் சட்டகம் இருக்கிறது. அனைவருக்கும் பொதுவான, நடுநிலையான சிந்தனைச் சட்டகம் சாத்தியமற்றது. மதச்சார்பற்ற சட்டங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை என்று வாதிடப்படலாம். ஆனால், அவற்றுக்கு நவீன சிந்தனைச் சட்டகம் ஆதாரமாக விளங்குகிறது.
அந்தச் சட்டகத்தின் அடிப்படையில் இயற்றப்படும் சட்டங்கள் வழியாக நவீனச் சிந்தனையும், அதற்குத் தோதுவான வாழ்வொழுங்கும் குடிமக்கள் மீது திணிக்கப்படுகின்றன. இவற்றை எவரேனும் எதிர்த்தால் அவர் சிறைவைக்கப்படவோ அபராதம் விதிக்கப்படவோ நேரிடும் அல்லவா? பிறகு எப்படி அவற்றுக்கு எந்தச் சார்பும் இல்லை என்றும், இன்னொருவர் நம்பிக்கையில் தலையிடக் கூடாது என்றும் அவர்கள் கூற முடியும்?
மேலும் படிக்க