கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் கதாநாயகியைக் கொண்ட மிஸ் மார்வல் தொடர் எப்படியிருக்கிறது?

Loading

அமெரிக்க முஸ்லிம்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, அடையாளச் சிக்கல்கள், நெருக்கடிகள் ஆகியவற்றைத் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லைக்குள் கரிசனத்தோடு சித்தரிக்க முயன்றுள்ளது மிஸ் மார்வல் தொடர். நியூயார்க் நகரத்தில் இருக்கும் பள்ளிவாசலையும், அதனுள்ளே இயங்கும் ஒரு பண்பாட்டு வெளியையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது. அதேபோல், பல்வேறு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட, அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இஸ்லாமியர்கள் தங்களது பண்டிகைகளையும், வீட்டு விஷேசங்களையும் ஒன்றிணைந்து கொண்டாடுவதைக் காட்டுவது நெகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. உதாரணமாக, கமலா கானின் அண்ணன் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்வார். அவரும், இஸ்லாமியர் அல்லாத கமலாவின் மற்ற நண்பர்களும் பாகிஸ்தான் முஸ்லிம்களின் பண்பாட்டு உலகிற்குள் நுழைந்து, ஈத், திருமணம் முதலான அவர்களின் கொண்டாட்டங்களில் மகிழ்வோடு கலந்துகொள்ளும் காட்சி அத்தனை இனிமையாக இருந்தது.

மேலும் படிக்க
The Evolution of Atheism: The Politics of Modern Movement tamil தமிழ் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

நாத்திகவாதத்தின் பரிணாமம் (நூல் அறிமுகம்)

Loading

சமகாலத்தில் தீவிரமாக அலசப்படும் ஒரு தோற்றப்பாடாக நவநாத்திகம் (New-Atheism) மாறியிருக்கிறது. அந்த வகையில், நவநாத்திகவாதத்தை அதன் அறிவுத் தத்துவம், பண்பாட்டு நோக்கு மற்றும் சமூக-அரசியல் பரிமாணம் எனப் பல்வேறு கோணங்களில் ஆராயும் மிக முக்கியமான புத்தகமாக சமூகவியல் ஆய்வாளர் ஸ்டிபன் லெட்ரூவின் The Evolution of Atheism: The Politics of Modern Movement உள்ளது. யோர்க் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்திற்காகச் சமர்பிக்கப்பட்ட ஆய்வை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பொதுவாக, சமூகவியல் பரப்பில் மத நம்பிக்கையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், சமூக-அரசியல் விவகாரங்களை அணுகுவதில் அவர்களது மதம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது போன்ற கேள்விகளை ஆய்வு செய்வதிலேயே ஆய்வாளர்கள் அதிகம் கரிசனம் கொள்கிறார்கள். ஆனால், மதத்தைத் துறந்தவர்கள் அல்லது நாத்திகர்களின் சமூக நடத்தை எப்படியிருக்கிறது என்பது குறித்த ஆய்வுகள் சமூகவியல் துறையில் மிக அரிது. அந்த இடைவெளியை இப்புத்தகம் பூர்த்தி செய்ய முயல்வதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க
bulldozer politics bjp tamil afreen fatima கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புல்டோசர் பயங்கரவாதம்: இஸ்ரேலைப் பின்பற்றும் இந்தியா

Loading

உலகிலேயே சட்ட விதிகளை மீறி சிறுபான்மையினர் வீடுகளைத் தகர்ப்பது இரண்டே நாடுகள்தான்; ஒன்று இஸ்ரேல், மற்றொன்று இந்தியா என்கிறார்கள். ஒரு நாடாக இந்தியாவுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? இந்தியர்கள் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.

இந்து ராஷ்டிர கனவில் மிதக்கும் சங் பரிவாரம் முஸ்லிம்களை அதன் முதன்மை இலக்காக்கி தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாட்டில் மத ரீதியாக பதற்ற நிலை ஏற்பட்டால் அதை அருவடை செய்து பெரும் அரசியல் லாபமடைவது பாஜகதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்னைகள் இந்தியாவை சூழ்ந்துள்ளன. இந்திய மக்கள் வெறுப்பரசியலுக்கு இனியும் இடமளித்தால் இன்னொரு இலங்கையாக இந்தியா மாறக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.

மேலும் படிக்க
hijab tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப்: ஆதிக்க எதிர்ப்புக் குறியீடு – யாசிர் காழி

Loading

தற்போதைய பிரச்னையை ஹிஜாப் அணிவதற்கான உரிமை தொடர்பான விஷயமாக மட்டும் நாம் சுருக்கிப் புரிந்துகொள்ளக் கூடாது. அவர்கள் தங்களின் நாகரிகமே ஆதிக்கம் செலுத்த வல்லது என்றும், தாங்களே பலம்மிக்கவர்கள் என்றும் நிறுவ நினைக்கிறார்கள். முஸ்லிம்களை தங்களுக்குக் கீழானவர்கள், இரண்டாந்தரக் குடிகள் என்று நிறுவ முனைகிறார்கள். அதற்காக அவர்கள் இஸ்லாமிய அடையாளங்களைக் குறிவைத்து ஒடுக்குகிறார்கள். அந்த அடிப்படையில் இப்போது அவர்களின் தெரிவாக ஹிஜாப் உள்ளது. பல பண்பாடுகளில் தலையை மறைக்கும் வழக்கம் இருந்தாலும் தற்போது இஸ்லாமியப் பண்பாடு அளவுக்குப் பரவலாக அது இல்லை எனலாம்.

மேலும் படிக்க
kayalpattinam shuaib குறும்பதிவுகள் 

புத்தக மனிதர் சுஐபு காக்கா

Loading

அமெரிக்காவாழ் இந்தியரொருவர் சுஐபு காக்காவின் புத்தகங்களை அப்படியே விலைக்கு எடுத்துக் கொள்கிறேன் எனச் சொன்னார். மூத்த ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசனின் வழிகாட்டுதலின்படி சுஐபு காக்காவின் மொத்த நூல் சேகரம் அவர் மிகவும் நேசித்த காயல்பட்டினம் அரசு நூலகத்தில் சேர்க்கப்பட்டு அவரது பெயரிட்ட தனியடுக்கில் வைக்கப்படவுள்ளன.

மேலும் படிக்க
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

‘க’ஞானம்

Loading

முதுகு ஒட்டிக் கொண்டு வியர்த்து எண்ணெயாகி டைல்ஸ் தரை நழுவியது. சற்று நகர்ந்த பிறகு பழைய இடத்திலுள்ள வியர்வையின் மினுமினுப்பில் ஜன்னலின் கிராதி கோணவும் தலையின் சூடு மெழுகாகி இளகியது. அதற்கு மேல் தொடர மனமில்லை. எழும்பி அமர்ந்து கொண்டான் நூகு.

பச்சையும் கருமையுமாக இடது கெண்டைக்காலில் முந்திரிக்கொத்து போல சுருண்டிருந்த சுருள் நரம்பு பிரச்சினைக்கு விபரீத கரணி ஆசனம் சிறந்தது என யோகாச்சார்யன் இஸ்மாயீல் திருவனந்தபுரம் வானொலியில் சொல்லியதைக் கேட்டிருந்தான். அதன் பேரில் ஒரு வாரமாக காலை அல்லது மாலை என நூகின் யோகாசனப் பயிற்சி தீவிரமடைந்தது.

மேலும் படிக்க
malcom x tamil குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒடுக்கப்பட்ட மக்களுடன் அணிசேர்தல்

Loading

நாம் விடுதலை பெறுவதற்கான ஒரே வழி, உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருடனும் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமே.

– மால்கம் X (மாலிக் அல்-ஷப்பாஸ்)

மேலும் படிக்க
gyanvapi mosque tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஞான்வாபி மஸ்ஜித் – கிணற்றுக்குள் பூதம்!

Loading

பாபர் மசூதியுடன் எதுவும் முடிந்துவிடவில்லை. நிஜத்தில் பாபர் மசூதி பலவித வரிசை மாற்றங்களுக்கும், பெருக்கல் சாத்தியங்களுக்கும் அரசியல் இந்துத்துவத்தை இட்டுச் சென்றிருக்கிறது. இப்போது சந்திக்கு இழுத்து விடப்பட்டுள்ள ஞான்வாபி மசூதி – வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்திற்கு அருகமையில் உள்ள இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாகும். காசி விசுவநாதர் ஆலயத்தின் நிர்வாகத்தை அரசு 1983 முதல் தன்வசம் எடுத்துக்கொண்டு நடத்தி வருகிறது. அதற்கு முன்பாக இருந்த மடாதிபதிகளில் ஒருவரான சுவாமி ராஜேந்திரா என்பவர் இந்த விவகாரம் பற்றிப் பேசும்போது, (இன்கே பாஸ் ராம் நஹீ ரஹங்கே.. யே பெரோஜ்கார் ஹோ ஜாயேங்கே) ‘இவர்களுக்கு (இந்துத்துவர்கள்) ராம் இல்லாது போனால், வேலை வெட்டி இல்லாதவர்களாக ஆகிவிடுவார்கள்’ என்றார். மேலும் விவரமாகப் பேசுகையில், “இப்போது புதியதொரு வேலையைத் துவக்க ஒரு தளம் (ராமர் கோவில் மூலம்) அவர்களுக்குக் கிடைத்துள்ளது” என்றார்.

மேலும் படிக்க
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

புத்த, சமண கோவில்கள் இந்து ஆலயங்களாக மாற்றப்படவில்லையா?

Loading

கஜினி முகம்மது பதினேழு முறை சோமநாதபுரம் கோவிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்குப் பாடநூற்கள் சொல்லியுள்ளன இல்லையா? பண்டைய இந்தியாவில் கோவில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன. இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதாம். இந்த அடிப்படையில்தான் கஜினி முகம்மது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும், எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவுமே கோவில்கள் மீது படையெடுக்கப்பட்டன. எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோவில்களையோ, தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோவில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசிப் ஆட்சிக் காலத்திலும் அப்படித்தான். அவருக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோவில்களும் இடிக்கப்பட்டன.…

மேலும் படிக்க
why muslim girls wearing hijab கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப்: முஸ்லிம் பெண்களைத் துரத்தும் கேள்விகளும், அதற்கான பதில்களும்!

Loading

ஹிஜாப் உங்கள் சுயதேர்வா அல்லது வீட்டிலுள்ளர்களின் அழுத்தத்தால் கடைப்பிடிக்கப்படுவதா?

இது எங்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதாக முஸ்லிமல்லாதோர் பலர் நினைக்கிறார்கள். அந்த அடிப்படையிலிருந்துதான் இந்தக் கேள்வி வருகிறது. நாங்கள் மூளை சலவை செய்யப்பட்டிருப்பதாகக்கூட ஒருசிலர் வெறுப்பைக் கக்குகிறார்கள். எங்களுக்கு சுயசிந்தனை இல்லை என்பதுபோல் அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். ஒருவகையில் இதுவெல்லாம் முஸ்லிம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை.

சுயதேர்வு பற்றி ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஒருவரின் சுயதேர்வு 100 சதவீதம் எந்தப் புற அழுத்தமும் இல்லாமல் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்ல முடியுமா? நம் சமூகத்தில் பெண்கள் முடியை நீளமாக விடுவதும், ஆண்கள் தன் முடியைக் கத்தரித்துக்கொள்வதும் அவரவர் விருப்பங்களின்படிதான் நடக்கிறதா? அவ்வாறு நடந்தால் மக்கள் எல்லோரும் எப்படி ஒன்றுபோல் இருக்க முடிகிறது?

அதனால் ஹிஜாபை திணிப்பு, அடிமைத்தனம் என்றெல்லாம் வெளியிலுள்ளோர் சொல்லக் கூடாது. அது எங்களை அவமதிக்கும் செயல். அப்படிச் சொல்வோரை சட்டப்படி தண்டிக்க வழிவகைகள் தேவை என்று நினைக்கிறேன். ஹிஜாப் குறித்து கருத்துச் சொல்லும் உரிமை மற்றவர்களைவிட எங்களுக்குத்தான் இருக்கிறது.

மேலும் படிக்க