இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 1) – சையித் குதுப்
 
இஸ்லாத்திற்கென்று தனித்த, அனைத்தையும் தழுவிய ஒரு உலகக் கண்ணோட்டம் இருக்கின்றது. இஸ்லாம் முன்வைக்கும் இறைக் கோட்பாடு தொடங்கி, அது கொண்டுவர விரும்பும் சமூக மாற்றம் வரை அனைத்தும் அதிலிருந்தே பிறக்கின்றன. அதனை இரத்தின சுருக்கமாக, திட்டவட்டமான முறையில் வரைவிலக்கணம் செய்யும் முயற்சியில் சையித் குதுப் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ (கசாயிஸ் அத்-தசவ்வுர் அல்-இஸ்லாமி) என்பது புத்தகத்தின் தலைப்பு. இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக நிலைநிறுத்த உழைக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய சாராம்சமான விசயங்களை அதில் முன்வைத்துள்ளார். இஸ்லாமிய உலகக் கண்ணோட்டம் என்பதென்ன என்று விளங்க முயலும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் நல்லதொரு அறிமுகப் பிரதியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
மேலும் படிக்க
 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			